பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்போக்கு இலக்கிய இயக்கங்கள் 33 பத்திரிகைகள் பல வெளிவரத் தொடங்கின. 1951 ஏப்ரலில் விஜய பாஸ்கரன் 'விடி வெள்ளி' என்ற வாரப் பத்திரிகை யைத் தொடங்கினார் . 1952இல் குயிலன் “வாரம்' என்ற பத்திரிகையைத் தொடங்கினார். இவை ' இரண்டிலும் நானும் கவிதைகள் மற்றும் கட்டுரைகளை எழுதி வந்தேன். 1952இல் 'சக்தி' பத்திரிகை பொருளாதார நெருக்கடியின் காரணமாக நின்று போனபின், நான் திருநெல்வேலிக்குத் திரும்பி வந்தேன், தி , க . சி . யும் திருநெல்வேலிக்கு - மாற்றலாகி வந்திருந்தார் . இதனால் 1952இல் நாங்கள் மீண்டும் 'முற்போக்கு எழுத்தாளர் சங்கம்' என்ற பெயரிலேயே ஒரு சங்கத்தைத் தொடங்கினோம் . இது முறையாக செயல்பட்டு வந்தது; பல. இலக்கியக் கூட்டங் களை நடத்தியது; இதில் ஜீவாவும் பாலனும் கலந்து கொண்டு பலமுறை உரையாற்றினர். 1952இல் இந்தச் சங்கம் புதுமைப்பித்தன் விழாவைப் புத்தகக் கண்காட்சி, 24கைப்படக் கண்காட்சி, கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் எனப் பலவாறும் மிகச் சிறப்பாகக் கொண்டாடியது - 1954 டிசம்பரில் நான் “சாந்திப் பத்திரிகையைத் தொடங் தினேன் . நெல்லையில் தோற்றுவிக்கப்பட்ட இந்த முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் அதன் நடவடிக்கை களும், 'சாந்தியின் தோற்றமும்தான் கந்தர ராமசாமி, டி . செல்வராஜ் ஆகிய இரு சிறந்த எழுத்தாளர்களைத் தோற்றுவித்து முற்போக்கு இலக்கிய அணிக்குக் கொண்டு வந்தது. “சாந்தி' நடத்திய புதுமைப்பித்தன் நினைவுச் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசைப் பெற்ற சுந்தர ராமசாமி முதலில் 'சாந்தியிலும், பின்னர் 1955 மே மாதத்தில் விஜயபாஸ்கரன் தொடங்கிய 'சரஸ்வதிப் பத்திரிகையிலும் முற்போக்கான கதைகள் பலவற்றையும் எழுதி வந்தார். 1954இல் நான் தொடங்கிய “சாந்தி' 1956 முற்பகுதியில் நின்று விட்டது . என்றாலும் இதே காலகட்டத்தில் தான் விந்தன் 'மனிதன்' என்ற மாத இதழைத் தொடங்கினார். இது ஒன்பது மாதங்களே நடந்தது . என்றாலும், இதில்