பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்போக்கு இலக்கிய இயக்கங்கள் - 25 சோவியத் நாட்டில் நடந்ததென்ன? நான் முன்னர் குறிப்பிட்ட வக்கிரமான பார்வையே தமிழ் fநாட்டில் முற்போக்கு இலக்கிய இயக்கம் தொடங்கிய நாற்பதாம் ஆண்டுகளில் நம்மிடையே நிலவியதற்குக் காரணம் என்ன? இதற்கு நாற்பதாம் ஆண்டுகளில் நமக்கு வழிகாட்டியாகவிருந்த சோவியத் நாட்டு இலக்கியக் கருத்து நிலை பற்றி, அங்கு கோலோச்சி நின்ற இவக்தியக் கோட்பாட்டைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் . இதற்குச் சில அடி.யாரம்பமான விவரங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். லெனின் காலத்தில் அவர் மாற்றுக் கருத்துக் கொண் டிருந்த கட்சியோடு மாறுபட்டு நின்ற எழுத்தாளர் களை8.ம் மதிப்பவராகவும் சகித்துக் கொள்பவராகவும் இருந்தார். உதாரணமாக, மாக்சிம் கார்க்கி 1917இல் திகழ்ந்த புரட்சிக்குப் பின் அதன் போக்கைக் குறித்துக் கடுமையான கருத்து வேறுபாடு கொண்டிருந்தார்; அதனை அவர் எழுதி வெளியிடவும் செய்தார். என்றாலும் லெனின் அவரைத் தாக்கி எழுதவில்லை, ஏனெனில் 'கார்க்கி அவ்வாறு எழுதினாலும் அவரது உள்ளம், புரட்சியோடும் சோஷலிசத்தோடும் இணைந்தது என்பதை அவர் அறிந்தே இருந்தார். எனவே அவரோடு பேசி, அவருக்கு நிலைமையை விளக்கி, அவருக்குத் தெளிவு ஏற்படுத்தவே லெனின் முயன்றார். கார்க்கி தாம் கொண்டிருந்த கருத்து தவறானது என்று உணர்ந்தார்; இதன்பின் அவர் லெனினை வான ளாவப் புகழ்ந்து எழுதத் தொடங்கினார், அப்போதுதான் லெனினுக்கு அவர்மீது கோபம் பிறந்தது , இவ்வாறு தனிநபர் வழிபாட்டைப் போற்றி எழுதியதை அவர் கண்டித்தார்; பொலிட் பீரோவைக் கூட்டி, தனிநபர் வழிபாட்டைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றவும் செய்தார் , இதேபோல் கவிஞர் மயாகோவ்ஸ்கியைக் காட்டிலும், புஷ்கினே சிறந்த கவிஞர் என்று லெனின்