பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 - முற்போக்கு இலக்கிய இயக்கங்கள் கருதினார். ஒருமுறை அவர் இளைஞர்கள் சிலரைச் சந்தித்தபோது, 'நீங்கள் யாருடைய கவிதைகளை மிகவும் விரும்பிப் படிக்கிறீர்கள்?” என்று அவர் களிடம் கேட்டார். அவர்கள் மயாகோவ்ஸ்கி என்று பதிலளித்தனர். அப்போது லெனின், 'நீங்கள் புஷ்கினையும் படிக்க வேண்டும். புஷ்கின் மிகச் சிறந்த கவிஞர்' என்று அவர்களிடம் கூறினார். என்றாலும், மயாகோவ்ஸ்கியின் கவிதைகளுக்கு இளைஞர் கள் மத்தியில் அமோகமான செல்வாக்கு இருப்பது ஏன் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதிலும் அவர் அக்கறை காட்டினார். மயாகோவ்ஸ்கியின் futurism - எதிர் காலவாதம் லெனினுக்குப் பிடிக்கவில்லை. எனவே அவரது '15 கோடி' என்ற கவிதையை அதிகப்படியான. பிரதிகளாக அச்சிட்டமைக்காக லெனின் லுனாச் சார்ஸ்கியைக் கண்டித்தார், ஆனால் அதே லெனின், அவசரப் பணி களுக்குத் தீர்வு காண்பதில் அக்கறை செலுத்துவதைக் காட்டிலும், கட்சித் தலைவர்கள் எப்போது பார்த்தாலும், கமிட்டிகள் கூடி விவாதித்துக் கொண்டிருந்ததைக் கிண்டல் செய்து, மயாகோவ்ஸ்கி எழுதிய 'மாநாடுகளைப் பற்றி On Conferences என்ற கவிதையை லெனின் பாராட் டவும் செய்தார். இதேபோல் கவிஞர் தெம்யாள் பெத்னி சில அற்பத்தவறுகளைச் செய்தமைக்காக, பிராவ்தா பத்திரிகையிலிருந்து அவரை வெளியேற்றிய காலத்தில், லெனின் தெம்யான் பெத்னி விஷயத்தில் அவரை நான் தொடர்ந்து ஆதரிக்கிறேன் , "நண்பர்களே, (மானிடத் தவறுகளில் குற்றம் காணாதீர்கள். திறமை என்பது அபூர்வமானது. அதனை முறையாகவும் கவனமாகவும் ஆதரிக்க வேண்டும்" என்று பிராவ்தாவுக்கு எழுதினார், இதன் பின்னர் தெம்யான் பெத்னி மீண்டும் பிராவ்தாவின் ஆசிரியர் குழுவில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். ("Sovie Literature" எண் 5/89) இதற்கெல்லாம். மாறாக, ஸ்டாலின் தமது ஆட்சிக் காலத்தில் மாற்றுக் கருத்துக்களையே சகித்துக் கொள்ளாத வராக இருந்தார் , இதற்கு இலக்கியக் கர்த்தாக்களும் விதி