பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்போக்கு இலக்கிய இயக்கங்கள் - 37 விலக்காக இருக்கவில்லை. இதனால் லெனின் காலத்துக்குப் பின்னர் தோன்றிய RAPP என்னும் ரஷ்யப் பாட்டாளி வர்க்க எழுத்தாளர் ஸ்தாபனம் ஸ்டாலினின் ஆசீர் வாதத்தோடு இலக்கியத்துறையில் ஒரு சட்டாம்பிள்ளை யாகவே செயல்பட்டு வந்தது. இது மயாகோவ்ஸ்சியைக் கூட கண்டித்தது; குறை கூறியது. இதற்கு மயாகோவ்ஸ்கி எழுதிய Bath - House 'குளியலறை' - என்ற நாடகம், ஸ்டாலின் ஆட்சியில் வலுவாக உருப்பெற்றுவிட்ட அதிகார வர்க்கத்தின் தன்மையை அம்பலப் படுத்தியதும் ஒரு காரணமாகும். இதனால் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளான மயாகோவ்ஸ்கி மிகவும் மனம் உடைந்து போயிருந்தார்; அத்துடன் ஒரு காதல் விவகாரத்திலும் அவர் விரக்தியுற்றிருந்தார். இதனால் அவர் 1930இல், தம்மைத் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை புரிந்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கு அபேரைக் கண்டித்தவர்கள் பல காரணங்களையும் கூறினர். அவர் "வாழ்நாள் முழுவதும்.. புளுகியே வந்தவர். பொய்யிலே பிறந்து (பொய்யிலே வளர்ந்து, பொய்யிலேயே சிக்கிக் கொண்ட அவர் தற்கொலை செய்து கொள்ளாமல் வேறு என்ன செய்வார்?" என்று கூறினர். வேறு சிலர் "அவருக்கு சிபிலிஸ் நோய். அந்த ரகசியம் வெளியே தெரியக் கூடாது என்றுதான் தற்கொலை செய்து கொண்டார்" என்று கூடப் பழி தூற்றினர் {Soviet Literature எண். 11 / 88) . ஆனால் அவரோ தற்கொலை செய்து கொள்ளுமுன் எழுதி வைத்த குறிப்பில் 'எனக்கு வேறு வழியில்லை, ஆனால் நான் இதை வேறு யாருக்கும் சிபாரிசு செய்ய மாட்டேன்' என்றே எழுதியிருந்தார் (Penquin New Writing எண் 11 | 1942) ஆனால் உண்மையில் 'ராப்' அவர் மீது தொடுத்த கடுமையான கண்டன விமர்சனங்களே, அவர் தற்கொலை செய்து கொண்டதற்கு முக்கிய காரணமாகும். 'ராப்' உலகப் புகழ்பெற்ற நாவலாசிரியரான ஷோல கோவையும் கூட விட்டு வைக்கவில்லை . 'டான் நதி அமைதியாக ஓடுகிறது' (Arid uெiet flaws the Don) என்ற பிறந்து போவதும் புளுகியே வம்ச ம் கூறினர்,