பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 -- முற்போக்கு இலக்கிய இயக்கங்கள் அவரது தலைசிறந்த பெரும் தாவலை - லியோ டால்ஸ்டாரின் 'போரும் சமாதானமும்' (Vvar aths Peace) என்ற பெரு நாவலுக்குப் பின் தோன்றிய சிறந்த நாவல் எனப் பலரும்: பாராட்டிய நாவலை அவர்கள் குறை கூறினர். அந்த நாவலில் அவர் செஞ்சேன்ன வீரர்களைப் பற்றி வருணிக்கும்போது, அவர்கள் சரியாகக் குதிரைச் சவாரி செய்ய இயலாதவர்களாக இருந்ததைக் குறிப்பிட்டிருந்தார். "செஞ்சேனை வீரர்களுக்குக் குதிரைச் சவாரி செய்யத் தெரியாது என்று ஒரு சோவியத் ஒழுத்தாளர் எழுதலாமா?" என்று 'ராப்' விமர்சகர்கள் கொதித்தெழுந்தனர். ஆனால் உண்மை என்னவெனில், பரம்பரை பரம்பரையாய் குதிரைகளோடு பிறந்து வளர்ந்து, குதிரைச் சவாரியில் மிகவும் கெட்டிக்காரர்களாக விளங்கிய பான் நதிக்கரைக் கோசாக்குகளை எதிர்த்தே செஞ்சேனை வீரர்கள் போரிட்டு வந்தனர், செஞ்சேனை வீரர்களுக்கு அந்த அளவுக்குக் குதிரையேற்றப் பயிற்சி கிடையாது என்பதே எதார்த்தம் . என்றாலும், குதிரைச் சவாரி செய்யத் தெரியாத செஞ்சேனை வீரர்கள் தான் இறுதியில் குதிரைச் சவாரியில் கைதேர்ந்த கோசாக்குகளை முறியடித்து வெற்றி கண்டார்கள் . ஆனால் அந்தக் கதையிலிருந்த இந்த உண்மையை 'ராப்' விமர்சகர்கள் காணவில்லை. இதனால் அந்த நாவலை வெளியிடக் கூட்டாது என்று தடை விதித்தனர். இதன்பின் ஷோலகோவ் கார்க்கிக்கு இதைப் பற்றி விளக்கமாகக் கடிதம் எழுதினார். இதன் பயனாய், கார்க்கியின் தலையீட்டுக்குப் பின்னர்தான் அந்த நாவல் வெளியிடப்பட்டது (Shotokcv - A - Sritical appreciation - Lyakimenkc 39 பக்கம் - 33 - ஷோலகோவுக்கே இந்தக் கதி என்றால், ஏனைய எழுத்தாளர்களின் நிலையைப் பற்றி நீங்கள் ஊகித்துக் கொள்ளலாம். இந்த 'ராப்' ஸ்தா பனம் அதிகார வர்க்கத்தை,ம் விமர்சிக்கத் துணிந்தவுடன், இது 1932 இல் கலைக்கப்பட்டது , சோஷலிச எதார்த்தவாதம் உருவான கதை : இது கலைக்கப்பட்டபின், அதே 1932 ஆம் ஆண்டில் சோவியத் எழுத்தாளர்கள் அனைவரையும் ஒரே