பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்போக்கு இலக்கிய இயக்கங்கள் : 38 - - - --- -- --- ஸ்தாபனமாக ஒருங்கிணைக்கும் சோவியத் எழுத்தாளர்கள் யூனியன் - அதாவது சோவியத் எழுத்தாளர் சங்கம் - நிறுவப்பட்டது, இந்தச் சங்கம் நிறுவப்பட்ட காலத்திலேயே "சோஷலிச எதார்த்தவாதமே சோவியத் எழுத்தாளர்களின், இலக்கியசத்தின் கோட்பாட்டாகும்' என அறியாக்கப்பட்டது . " 1907இல் வெளிவந்த மாக்சிம் காரர்க்கியின் 'தாய்' என்ற நாவல்தான் சோஷைலிச எதார்த்தவாதத்தைத் தொடங்கி வைத்த முதல் நூல் என்றும், கார்க்கியே சோஷலிச எதார்த்த வாதத்தின் தந்தை என்று கூறப்பட்டாலும், 'சோஷலிச எதார்த்தவாதம்' என்ற சொற்சேர்க்கை 1932இல் தான் பிரயோகத்துக்கு வந்தது. இந்தச் சொற்சேர்க்கை உரு வானதே ஒரு சுவையான. கதையாகும் . அதாவது 1932க்கு முன்பே, கலை இலக்கிய விஷயத்தில் இயக்கவியல் பொருள் முதல்வாத முறையைப் பிரயோகிப்பதற்கான வழிமுறை பற்றிய விவாதங்கள் நடைபெற்று வந்தன; இதற்கு ஒரு பெயரைச் சூட்டும் முயற்சிகளும் நடைபெற்றன , யூரி லிபெதென்ஸ்கி என்பவர் ”பாட்டாளி வர்க்க எதார்த்த வாதம்" என்றும், மயகோவ்ஸ்கி "கருத்து நிலைச் சார்பாக எதார்த்த வாதம்" என்றும் "அக்கினிப் பரீட்சை" போன்ற பெருநாவல்களை எழுதிய அலெக்சி டால்ஸ்டாய் "மகத்தான எதார்த்தவாதம்" என்றும் லுனாச்சார்ஸ்கி "சமூக எதார்த்தவாதம்" என்றும், விளதிமிர் ஸ்தாவ்ஸ்கி என்ற எழுத்தாளர் "புரட்சிகரமான உள்ளடக்கம் கொண்ட எதார்த்தவாதம்" என்றும், இவான் குலிச் என்ற எழுத்தாளர் "புரட்சிகர சோஷலிச எதார்த்தவாதம்' என்றும் இதற்குப் - பெயர் வைக்கலாம் என்று யோசனை கூறினார் :' இவான் கிரான்ஸ்கி என்ற எழுத்தாளரும் 1932 மே 29இல் லிட்டரரி கெஜட் என்ற பத்திரிகை எழுதிய தலையங்கமும் "சோஷலிச - எதார்த்தவாதம்" என்று பெயர் வைக்கலாம் என்று தெரிவித்தனர். இதன்பின் அதே ஆண்டு அக்டோபர் இறுதியில் கார்க்கியின் இல்லத்தில் நடந்த எழுத்தாளர் கூட்டமொன்றில் கலந்து கொண்ட ஸ்டாலின் "சோஷலிச எதார்த்தவாதம்" என்ற பெயரே பொருத்தமாயிருக்கும் என்று