பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 - முற்போக்கு இலக்கிய இயக்கங்கள் கூறினார் . ஸ்டாலின் கூறியபின், அதே வேதவாக்காகி விட்டது' . இதனாத் தொடர்ந்து சில நாட்களில் சோவியத் எழுத்தாளர் சங்கம் நிறுவப்பட்ட காலத்தில் ஸ்டாலினே. சோவியத் இலக்கியத்துக்கும் எழுத்தாளர்களுக்கும் உரிய முறை சோஷலிச எதார்த்தவாதமேயாகும் என்று அறிவித்து விட்டார் {Soviet Literature எண். 4/89) , இவ்வாறு பெயர் வைத்ததில் ஒரு வினோதம் என்னவென்றால், இலக்கிய விஷயத்திலும் சரி, கலைகள் விஷயத்திலும் சரி, எதார்த்தவாதம், விமர்சன எதார்த்த வாதம், கற்பனாலங்கார வாதம், இயற்பியல் வாதம் என்றெல்லாம், கலைத்தன்மையைக் கொண்டு, அவற்றைப் பிரித்துக் காட்டுவதற்குத்தான் இத்தகைய - பெயர்கள் வைக்கப்பட்டு வந்தன. ஆனால் 'சோஷலிச எதார்த்தவாதம்' என்ற பெயரில், அழகியல் சார்ந்த கலைத் தன்மையைக் குறிக்கும் 'எதார்த்தவாதம்' என்ற சொல், முதன்முதலாக அரசியலைக் குறிக்கும் சோஷலிசம் என்ற சொல்லோடு இணைக்கப்பட்டது. இவ்வாறு அரசியல் சார்பான ஒரு சொல்லையும், அழகியல் சார்பான ஒரு சொல்லையும் சேர்த்து 'சோஷலிச எதார்த்தவாதம்' என்ற சொற் சேர்க்கையை உருவாக்கிய காரணத்தால்தான், அப்படி யென்றால் "முதலாளித்துவ எதார்த்தவாதம் {Captalist realism) என ஒன்றும் இருக்கிறதா?" என்ற கேள்வி சோவியத் நாட்டில் எழுந்திருக்கிறது . இதனாலேயே மேலைநாட்டு விமர்சகர்கள் சோவியத் இலக்கியக் கோட்பாட்டைப் பற்றிக் குறிப்பிடும்போது, அதனை சோஷலிச எதார்த்தவாதம் என்று குறிப்பிடாமல் சோஷேல் எதார்த்த வாதம் (Social realisrm). என்றே குறிப்பிடுகின்றனர். இதனாலேயே இலக்கியச் சொல் லாட்சிகள் அகராதி ஒன்று கூ... (A Dictionary of Literary Terms - Martin Gray பக்கம் 191) இதனை 'சோஷல் ரியலிஸம்' என்றே குறிப்பிட்டு, "இது கம்யூனிஸ்டு நாடுகளது அரசு அங்கீகாரம் பெற்ற கலைகளுக்குப் பிரயோகிக்கப்படும் ஒரு

  • காரம் பெற்ற இது கம்யூனி சோஷல் ரியல் ary