பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்போக்கு இலக்கிய இயக்கங்கள் ( 41 சொற்சேர்க்கை . இது வரலாறு பற்றிய மார்க்சியக் கருத்தினால் புரிந்து கொண்டபடி, உழைக்கும் வர்க்கங் களின் போராட்டங்களைச் சித்தரித்துக் காட்ட இலக்கிய மும் ஓவியமும் ஏற்றுக்கொண்டுள்ள முறையாகும்" என்று எழுதியுள்ளது. எனவேதான் இந்தச் சொற்சேர்க்கை விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது; நம்மையும் இதுபற்றிச் சிந்திக்கவும் விவாதிக்கவும் தூண்டுகிறது . இலக்கியத்தில் "கட்சி உணர்வு : இவ்வாறு சோஷலிச எதார்த்தவாதம்தான் சோவியத் எழுத்தாளர்களின் மார்க்கமாகும் - என்று அறிவித்த ஸ்டாலின், 'சோஷலிச அழகியலின் அடிப்படைக் கோட் பாடு என்பதே, இலக்கியத்தில் போல்ஷிவிக் கட்சி உணர்வு குடிகொண்டிருப்பதையே குறிக்கும், இதுவே லெனின் காட்டிய வழி" என்றும் விளக்கம் கூறிவிட்டார் . இந்த விளக்கத்தின் அடிப்படையில் 1932இல் தோற்றுவிக்கப் பட்ட சோவியத் எழுத்தாளர் சங்கம் தனது சட்ட திட்டங்களிலேயே இலக்கிய இயக்கத்துக்கும், கட்சி மற்றும் சோவியத் அரசு ஆகியவற்றின் கொள்கைக்கும் உள்ள நேரடியான நெருங்கிய தொடர்பை வலியுறுத்தும் ஷரத்து ஒன்றையும் சேர்த்துக் கொண்டது (Soviet , டர்erature No. 12 / 1949). லெனின் காட்டிய 'கட்சி உணர்வு' என்பது என்ன? ஸ்டாலின் இதற்கு 1905இல் லெனின் எழுதிய "Party Crganisation and Party literature" என்ற கட்டுரையையே ஆதாரமாக எடுத்துக் கொண்டார். இதில் ' 'பார்ட்டி விட்டரேச்சர்' என்ற சொற்கள் உண்மையில் கட்சி சம்பந்தப்பட்ட நூல்கள், பிரசுரங்கள் முதலியவற்றையே குறித்தன; இலக்கியத்தைக் குறிக்கவில்லை . 1905 அக்டோ பரில் நடந்த பொது வேலை நிறுத்தம் ஏற்படுத்திய நிர்ப்பந்தம் காரணமாக, ஜார் மன்னர் மக்களுக்கு சிவில் உரிமைகளை வழங்கினார். இதனால் பத்திரிகைச் சுதந்திரம் .