பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை


தமிழக முற்போக்கு கலை இலக்கியத்தின் அரை ந ற்றான்டு (1940 - 1990 ) வரலாறு குறித்து 1990 செப்டம்பர் 29, 30 தேதிகளில், திருநெல்வேலியில் நியூ செஞ்சுரி வாசகர் பேரவை கருத்தரங்கு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது. அரை நூற்றாண்டு வரலாறு' பற்றி. தொ . மு . சி . ரகுநாதன் அவர்கள் ஆற்றிய 'வழிகாட்டி உரையும், 'சுதந்திரத்தமிழகத்தின் கலை இலக்கியங்கள்' பற்றி பொன்னீலன் அவர்கள் ஆற்றிய உரையும் இத்தொகுப்பில் இடம் பெறுகின்றன, முற்போக்கு இலக்கியம் என்பதற்கு எப்படிப் பொருள் கொள்ள வேண்டும் என்பதும் தமிழ் நாட்டில் முற்போக்கு இலக்கியம் முளைக்கத் தொடங்கிய காலம், விதம், அதன் பின்னணி, சோதனை, சாதனை, வேதனை, தவறுகள் ஆகியவை பற்றியும் சுயவிமர்சன ரீதியில் சுட்டிக் காட்டப் பட்டுள்ளது . மனந்திறந்து பேசி, மக்கள் முன் ஓர் ஆரோக்கிய மான விவாதத்தைத் தூண்ட வேண்டும் என்ற நோக்கம் தொ , மு. சி. யின் முன்னுரையிலேயே தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சோசலிச எதார்த்தவாதம் என்றால் என்ன? இதன் வரலாறு என்ன? என்பது பற்றியும், சோசலிச எதார்த்த வாதத்திற்கு , எப்படிப் பொருள் கொள்ள வேண்டும் என்பதும் விளக்கப்பட்டுள்ளது. . 'வாழ்க்கையிலிருந்து கோட்பாட்டை வடித்தெடுப் பதற்குப் பதிலாக, கோட்பாட்டை வைத்துக் கொண்டு வாழ்க்கையை வடித்துக் காட்ட முயன்ற போக்கு பற்றி