பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்போக்கு இலக்கிய இயக்கங்கள் -43 with its other sides" {: - 0.enin on Literature and Art - Page No. 24). எனவே தாம் எழுதிய இந்தக் கட்டுரை பொதுவாக இலக்கியத்தைப் . .:ற்றியதல்ல, மாறாகக் கட்சியின் நடவடிக்கையில் கட்சி இலக்கியம், அதாவது கட்சியின் அரசியல் நூல்கள், எழுத்துக்கள், பிரசுரங்கள் ஆகிய வற்றைப் பற்றியதே.irrகும் என்பதை லெனின் நன்கு தெளிவுபடுத்தியிருக்கிறார்.. ஆனால் லெனின் எழுதியதை ஸ்டாலின் காந்திரிக மாகப் பயன்படுத்தி, கட்சிக்கும் கட்சி நடத்தும் அரசுக்கும் விசுவாசமாக இருப்பதும், அவற்றின் ஊது குழலாகச் செயல்படுவதுமே இலக்கியத்தின் கடமையாகும், அதுவே இலக்கியத்தில் கட்சியுணர்வு Party spirit ஆகும் என விளக்கி இலக்கியத்தைத் தமது நோக்கங்களுக்கு அடிமையாக்கும் காரியத்தைத் தொடங்கி - வைத்தார். சுருங்கக் கூறின், சோஷலிச எதார்த்தவாதம் என்பதைத் தமது சொந்தச் சுபகாரியவாதத்துக்கே அவர் பயன்படுத்திக் கொண்டு விட்டார். மேலும், எந்தவொரு சமுதாயத்திலும் அதற்கே உரிய சமூக முரண்பாடுகள் இருக்கத்தான் செய்யும், இந்தச் சமூக முரண்பாடுகளின் மோதலும், பரஸ்பரக் கிரியையுமே சமூகத்தை முன் கொண்டு செல்லும் என்ற மார்க்சியக் கோட்பாட்டையே மறைத்துவிட்டு, சோவியத் நாட்டில் வர்க்கங்களை ஒழித்து ஒரு வர்க்க பேதமற்ற சோஷலிச "அமைப்பை நிலைநாட்டிவிட்டதால், அங்கு முரண்பாடு களே இல்லை அதாவது அங்கு நன்மை தீமைகளுக்கு இடையிலான போராட்டம் என்பதற்கே இடமில்லை , அவ்வாறு அங்கு முரண்பாடு என ஒன்றிருந்தால், அது நல்லதற்கும் அதற்கும் மேலான நல்லதற்கும் இடையிலான (between good and better) முரண்பாடே இருந்து வந்தது என்ற ஒரு கருத்து நிலையை உருவாக்கினார். மேலும், இதனால் எழுத்தாளர்கள் குறைகளே இல்லாத, நிறைவே உருவான லட்சியக் கதாநாயகர்களையே - positive hero க்