பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 - முற்போக்கு இலக்கிய இயக்கல்கள் டிஜிலாஸ் கூறியதுபோல், கார்க்கியின் 14tycனத்தில் கல்டா லினுக்குப் பங்கு இருந்திருக்கலாம் என்று கருதுவதற்கு இடமிருப்பதாகத் தோன்றுகிறது . ஏனெனில் இலக்கிய சம்பந்தமான பல நூல்களை எழுதியுள்ள" சோவியத் பேராசிரியரான ஜார்ஜி குனித்சின் "ஸ்டாலின் கார்க்கியைக் கண்டு அஞ்சினார் என்பதை நிரூபிப்பதற்கு நான் பின்வரும் சான்றைக் குறிப்பிட முடியும் , பிரால்தாவில் நான் கலை இலக்கியத் துறை சம்பந்தப்பட்ட, இலாகாவுக்குத் தலைவ னாக இருந்த காலத்தில், 1935இல் முதிய கம்பாசிட்டர் ஒருவர், கார்க்கிக்கென்றே பிரத்தியேகமாக அச்சிடப்பட்ட பிராவ்தா இதழ்களில் 'மக்களின் எதிரிகள்' கைது செய்யப் பட்டது குறித்த தகவல்களுக்குப் பதிலாக, நண்டுகள் பிடிக்கப்பட்டது பற்றிய செய்திகள் இட்டு நிரப்பப்பட்டன என்று என்னிடம் கூறினார். என்றாலும் இத்தகைய மூடி மறைக்கும் வேலை கார்க்கியை நெடுநாட்களுக்கு ஏமாற்ற முடியவில்லை ... " என்று எழுதியிருக்கிறார். (Soviet Literature எண் 5/89). கார்க்கியின் விளக்கம் : முன் குறிப்பிட்டபடி, 1932இல் சோவியத் எழுத்தாளர் சங்கம் நிறுவப்பட்ட காலத்தில் சோஷலிச எதார்த்த வாதம்தான் சோவியத் : எழுத்தாளர்களின் இலக்கிய நெறிமுறையாகும் என்று - ஸ்டாலின் கூறிய பின்னர், 1934ஆம் ஆண்டில் சோவியத் எழுத்தாளர்களின் முதல் மாநாடு (First Ai1 Union Congress of Soviet Writers) நடைபெற்றது. இதில் தாம் ஆற்றிய உரையின் போது, கார்க்கி . 'சோஷலிச எதார்த்தவாதம் என்ற சொற் சேர்க்கையை ஏற்றுக் கொண்டாலும், அதற்கு ஸ்டாலின் வழங்கிய அர்த்த பாவத்தை ஏற்றுக் கொள்ளாமல், பொதுவான, விளக்கம் ஒன்றை அளித்தார். அதாவது 'சோஷலிச எதார்த்தவாதம்' என்பது "உண்மையான, வரலாற்று ரீதியில் ஸ்தலமான முறையில், எதார்த்தத்தை