பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்போக்கு இலக்கிய இயக்கங்கள் * அதன் புரட்சிகரமான வளர்ச்சியில்" இனம் கண்டு சித்திரித்துக் காட்டுவதேயாகும். "Socialist realism is truthful, historically co?cree portrayal of reality in its revolutionary development"> <என் று விளக்கம் கூறினார். மேலும் இத னையே விரித்துக் கூறுSMகயில், "சோஷலிச எதார்த்தவாதம் மனிதனைச் செயல்படுபவனாகக் காண்கிறது; வாழ்க்கையை , ஒரு படைப்பாக நடவடிக்கையாகக் கருதுகிறது, இந்த நடவடிக்கையின் நோக்கமானது இயற்கைச் சக்திகளை வெற்றி கொள்ளவும், மற்றும் நீண்ட ஆயுளைப் பெறவும், இந்த உலகில் வாழும் மாபெரும் நல்ல வாய்ப்பை அனுபவிக்கவும் வேண்டி, மனிதர்கள் வழங்கும் மிகவும் மதிப்புமிக்க தனித்தனியான செல்வங்களை இடையறாது வளர்ச்சியுறச் செய்து வருவதேயாகும்; மனிதன் தனது தேவைகளின் இடையறாத வளர்ச்சிக்கு ஏற்ப, ஒரே பெரும் குடும்பமாய் புனித குலம் மகோன்னதமாக வாழும் இடம் என்ற முறையில் இந்த உலகை மூலழுமையாக அனுபவிக் கலம் விரும்புகிறான்” என்று கூறினார். (Socialist realism tooks upcr being as doing, and regards existence.as a Creative activity, the object of which is the uninterufmpted development of time most valubke individual gifts (3f man, in order that they may conquer the formes of natkAre, acheive health and long life and enjoy the great fortune of living or earth, which man, in conformity with the incessant growth of his needs, warts to explicit in its entirety, as the Tiagnificient dwelling place of Tarnkind - united in One great family - "Literature and Life" - Maxim Gorky, பக்க ம் 140).. இந்த விளக்கம் நாம் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு நல்ல விளக்கம்தான் : சொல்லப்போனால், உண்மையான மனிதாபிமானம் மிக்க எந்தவோர் எழுத்தாளனுக்கும் ஏற்றுக் கொள்ளக்கூடிய குறிக்கோள்தான். ஆனால் சோஷலிச எதார்த்தவாதம் என்பதற்கு ஸ்டாலின் காலத்தில் வழங்கப்பட்டு வந்த அர்த்தபாவமும், அதனை வலியுறுத்தி