பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 () முற்போக்கு இலக்கிய இயக்கங்கள் சோவியத் சஞ்சிகைகளில் வெளிவந்த கட்டுரைகளும், விமர்சனங்களும், விளக்கங்களும், கட்சிக்கு விசுவாசமாக இருந்து, கட்சிச் சார்போடு எழுதப்படுபவை மட்டுமே சோஷலிச எதார்த்தவாதமாகும், முற்போக்கு இலக்கியமும் ஆகும் என்ற ஒரு குறுகிய, செக்டேரியன் தன்மை கொண்ட கருத்தையே நாற்பதாம் ஆண்டுகளில் நம்மிடையே உரு வாக்கியிருந்தன. ஜாதனோவ்' சோவியத் எழுத்தாளர் சங்கம் தோன்றுவதற்கு முன்னால், 'ராப்' எனப்பட்ட ரஷ்யப் பாட்டாளி வர்க்க எழுத்தாளர் ஸ்தாபனம், எழுத்தாளர்களுக்கு ஒரு சட்டாம் பிள்ளையாக இருந்து வந்ததென்றால், 1932இல் சோவியத் எழுத்தாளர் சங்கம் நிறுவப்பட்டபின், ஸ்டாலின் காலத்தில் மகாமேதை என மகுடம் சூட்டப்பட்டவரும், ஸ்டாலினின் நெருங்கிய சகாவுமான ஆந்திரி ஜாதனோவ் என்பவர் முப்பதாம் ஆண்டுகளிலும் நாற்பதாம் ஆண்டுகளிலும் கையில் சவுக்கைத் தரித்திருந்த சட்டாம்பிள்ளையாகவே இருந்து, இலக்கிய உலகின் தலைவிதியை நிர்ணயித்து வந்தார் , சொல்லப்போனால், இரு தோள்களிலும் சங்கு சக்கர முத்திரைத் தழும்புபளை ஏற்றவன்தான் சரியான வைஷ்ணவன் என்று தீவிர வைணவச் சமயாசாரியார்கள் சிலர் கருதி வந்ததைப் போல், கட்சிக்கும் ஸ்டாலினுக்கும் துதிபாடுபவர்களையும், ஸ்டாலினது ஆட்சியை ஏத்திப் போற்றுகிறவர்களையும்தான் அவர் எழுத்தாளர் என மதித்தார். இவ்வாறு துதிபாடும் எழுத்தாளர்களுக்கு "ஸ்டாலின் இலக்கியப் பரிசுகள்" என்ற பெயரால், முதல்வகைப் பரிசு ஒரு லட்சம், இரண்டாம் வகைப் பரிசு அரை லட்சம், மூன்றாம் வகைப் பரிசு கால் லட்சம் என ஆண்டுதோறும் பதினைந்து லட்சம் ரூபிள்களுக்குக் குறையாமல் பரிசுகளும் வழங்கப்பட்டன இந்தப் பரிசை திரும்பத் திரும்பப் பெற்ற எழுத்தாளர்களும் உண்டு. இந்த இலக்கியங்கள் அனைத்துமே இலக்கியத் தரம் மிக்கவை