பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்போக்கு இலக்கிய இயக்கங்கள் -- 43 எனச் சொல்லிவிட முடியாது . ஏனெனில் உதாரணமாக, நமது நாட்டில் வெளிவரும் 'கிரைம் நாவல்' போன்ற தகுதியையே கொண்ட, எனினும் நாவலின் இறுதியால் பல பக்கங்களில் ஸ்டாலினுக்குத் துதிபாடிமுடியும், போதிம் சோப்கோ என்பவர் எழுதிய 'சமாதானத்துக்கு 2.த்தரவாதம் (Guarantee of peace) என்ற உதவாக்கரை நாவலும் கூட ஸ்டாலின் பரிசு பெற்ற நாவல்களில் ஒன்றாகும். சொல்லட்: போனால் இத்தகைய பரிசுகளும், இத்தகைய எழுத்தாளர் களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளும் வசதிகளும் அவர் களுக்குக் கொடுத்த லஞ்சமாகவே இருந்தன எனலாம். அதேசமயம் கட்சி சார்பாக இந்த வறட்டுக் கோட் பாட்டு நிலையிலிருந்து மாறுபட்டு நின்ற ஏனைய! எழுத்தாளர்கள் துன்புறுத்தலுக்கும், அவமானத்துக்கும் உள்ளாக்கப்பட்டனர் . உதாரணமாக, சோவியத் இலக்கிய உலகில் நையாண்டி இலக்கியத்துக்கே {Satirical Literature) இடமில்லை என்றே ஜாதனாவ் கருதினார். இதனால் உலகப் புகழ்பெற்ற சோவியத் நையாண்டி இலக்கிய கர்த்தாவான மைக்கேல் ஜோஷெங் கோவை "இலக்கிய அயோக்கியன்" (Literary rascal) என்றே பழி தூற்றினார் . இவ்வாறு அவர் ஜோகெடிங்கோவைக் கண்டனம் செய்த மறுநாள் லெனின் கிராடில் வசித்து வந்த ஜோஷெங்கோவின் ரேஷன் கார்டு பறிமுதல் செய்யப்பட்டுவிட்டது. இவ்வாறு ஜாதனோவின் சட்டாம்பிள்ளைத்தனத்துக்குப் பலியான எழுத்தாளர்களும் கவிஞர்களும் பலராவர். ஜாதனோவ் 1948இல் இறந்தார். இவர் ஸ்டாலின் உத்தரவின் பேரிலேயே விஷமிட்டுக் கொல்லப்பட்டார் என்ற வதந்தியை உதறித் தள்ள முடியாது என்று இன்று சோவியத் யூனியனில் கூறப்படுகிறது (Sputnik எண் 1/83.) குருஷ்சேவ் காலத்தில் : ஸ்டாலினுக்குப் பின்னர் சோவியத் நாட்டில் குருஷ்சேவின் தலைமை ஏற்பட்ட பின்னர், 1954 இறுதியில்