பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ. மு. சி. அவர்கள் உதாரணத்தோடு விளக்கம் அளித் துள்ளார். வாணிப நோக்கம் மலிந்துவிட்ட, கலை இலக்கியத்தைக் கொச்சைப்படுத்தும் துறையாக மாறியுள்ள சூழ்நிலையில், கொள்கைப் பிடிப்போடு சாதித்தவைகளில் எதார்த்தவாதம், விமர்சன எதார்த்தவாதம், ஜனநாயக மனிதாபிமானம், சோசலிச எதார்த்த வாதம் என்பன வற்றுள் சிலவற்றை தொ. மு. சி. அவர்கள் குறிப்பிட் டுள்ளார். 'எந்த ஒரு எழுத்தாளனுக்கும் ஒரு தத்துவ அடிப் படை இருக்கத்தான் வேண்டும். அதனைத் தேர்ந்து தெளிந்து உருவாக்கிக் கொள்வது அவனது பொறுப்பு, தத்துவம் என்பது வழிகாட்டிதான், கைவிலங்கல்ல , தத்துவத்தின் மீது குருட்டுப் பக்தி கொண்டு அதற்கு அடிமைப்பட்டுவிட்டால், பிறகு வாய்ப்பாட்டுச் சூத்திரங் களை வைத்துக் கொண்டு எதையும் அளந்து பார்த்து ஏமாறும் நிலைதான் ஏற்படும். அப்போது அந்தத் தத்துவம் அந்தப் படைப்பாளிக்குத் தேக்க நிலையைத் தான் உருவாக்கும் . ' என்ற விளக்கத்தோடு தொ , மு . சி . அவர்கள் வழிகாட்டுகின்றார். முற்போக்கு இலக்கியம் என வரையறை செய்வதற்கு மனிதாபிமானம் அல்லது மனிதநேயம் தான் அடிப்படை அளவுகோலாக இருக்க வேண்டும் என்ற அடிப்படைக் கொள்கையை வலியுறுத்திக் கூறும் அதே வேளையில், மனிதாபிமானம் என்பதை நாம் எவ்வாறு அர்த்தப்படுத்த வேண்டும் என்பதையும் மிக முக்கியமானதாகக் குறிப்பிடு கின்றார் தொ. மு. சி. 'சுதந்திர தமிழகத்தில் கலை இலக்கியங்கள்' பற்றி பொன்னீலன் அவர்கள் குறிப்பிடும் போது, மன்னர்கள் காலம் தொடங்கி இன்றுவரை இலக்கிய அமைப்புகள் எவ்வாறு இருந்து வந்துள்ளன என்பது பற்றி விளக்க மாகக் குறிப்பிட்டுள்ளார்.