பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 ) முற்போக்கு இலக்கிய இயக்கதிகள் ஏற்றுக் கொண்ட எழுத்தாளர்கள் மட்டுமே உறுப்பினர் களாக முடிடம்* என் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது (மக்கள் எழுத்தாளர் சங்கம் - கொள்கை அறிக்கை, பக்கம் 12). இதன் பின்னர், சமீபத்தில் சென்ற ஜூன் மாதத்தில் இங்கு நெல்லையில் தனது ஐம்பதாவது மாநில மாநாட்டை நடத்தி முடித்த 'தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்' 1975 ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. இந்த மாநாட்டில் இந்தச் சங்கத்தில் நாலாயிரத்துக்கு மேற்பட்ட உறுப்பினர் கள் தற்போது இருப்பதாக அறிவித்தார்கள் . உண்மையில் பெருமைப்படக் கூடிய,, பாராட்டுக்குரிய விஷயம்தான். கான்றாலும் இவர்களில் உண்மையிலேயே எழுத்தாளர் களாக இருப்பவர்கள் எத்தனை பேர் என்பது சிந்தனைக் குரிய விஷயமாகும். இவை தவிர, 1982 இறுதியில் சமாதான மற்றும் ஒருமைப்பாட்டுக் கமிட்டியின் சார்பில் மதுரையில், நடைபெற்ற பாரதி - நூற்றாண்டு விழாவுக்கு இந்திய முற்போக்கு , எழுத்தாளர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளராகவிருந்த பிஷாம் சாஹ்னி வந்து, சென்றதைத் தொடர்ந்து தோழர் - ஜெயகாந்தனைத் - தலைவராகக் கொண்டு, இந்தச் சம்மேளனத்தின் தமிழ்நாட்டுக்கலை ஒன்றும் இருந்து வருகிறது. இவற்றின் செயற்பாடுகளையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நமது சாதனைகள் : நான் ஆரம்பத்திலேயே கூறியதுபோல், இந்த வழி காட்டி உரை நமது, சாதனைகளின் பட்டியலையோ, அவற்றின் குறைநிறை பற்றிய விமர்சனத்தையோ நோக்க மாகக் கொண்டிருக்கவில்லை. என்றாலும் அவை பற்றிச் சிறிதும் குறிப்பிடாமல் விடுவதும் அழகல்ல. நான் முன்னர் எடுத்துக் கூறிய இத்தகைய சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், கடந்த ஐம்பதாண்டுக் காலத்தில் நாமும், நம்மைச் சார்ந்தவர்களும், நம்மோடு சேர்ந்திருக்காவிட் பாலும் நமது இலக்கிய இயக்கம் ஏற்படுத்திய தாக்கத்தின்