பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்போக்கு இலக்கிய இயக்கங்கள் | 5? விளைவாக மக்கள் பிரச்சினைகளைக் குறித்து இலக்கியம் படைத்தவர்களும் சாதித்துள்ள சாதனைகள் மிகப்பல் வாகும் . இவற்றின் விளைவாக, இன்றைய தமிழ்நாட்டின் இலக்கிய உலகில் நாம் ஏனையோரும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டிய, கருத்தில் கொள்ள வேண்டிய ஒரு பெரும் சக்தியாக வளர்ந்திருக்கிறோம் என்பதில் ஐய மில்லை . அதிலும், பத்திரிகை உலகமும் காலை உலகமும் என்பது இன்று வாணிப நோக்கு மலிந்துவிட்ட ஒரு துறையாக, எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் விலை பேசி வாங்கக் கூடிய இறையாக, வாணிய நோக்கத்தோடு இலக்கியத்தையும் கலையையும் கொச்சைப் படுத்தும் துறையாக மாறியுள்ள சூழ்நிலையில், ' (கொள்கைப் பிடிப்போடு நாம் சாதித்து வந்தவை உண்மையில் பாராட்டத் தக்கவையேயாகும். அவையனைத்தையும் இங்குக் கூறுவது சாத்தியமல்ல. என்றாலும், எதார்த்தவாதம், விமர்சன எதார்த்தவாதமும், ஜனநாயக மனிதாபிமானம், சோஷலிச எதார்த்தவாதம் என்பன போன்ற அளவு கோல்களுக்குள் அடங்கும் சாதனைகளில் இப்போது என் நினைவுக்கு வரும் சிலவற்றை மட்டும் இங்குக் குறிப்பிட விரும்புகிறேன். ஆரம்ப காலம் தொட்டும் சரி, 1953 இல் கலை இலக்கியப் பெருமன்றத்தைத் தோற்றுவித்த பின்னரும் சரி, நாம் சாதித்த சாதனைகளில் பாரதியைத் தமிழ் நாட்டு மக்களுக்குச் சரியான முறையில் இனம் காட்டியதோடு, அவனைப் பற்றித் தவறான முறையில் கூறப்பட்டு வந்த கருத்துக்களையும் அவதூறுகளையும் தகர்த்தெறிந்தது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும் . இந்தப் பணியில் ஜீவா முன்னணியில் நின்றார்; நமக்கு முன்னோடியாகவும் இருந்தார். அவர் ஆற்றிய சொற்பொழிவுகளும், 'பாரதி வழி' - 'பாரதிபற்றி ஜீவா' ஆகிய அவரது நூல்களும் இதற்குச் சான்றாகும். அவருக்குப் பின் நான் 1.பாரதியைப் பற்றி எழுதியுள்ள 'பாரதி - காலமும் கருத்தும்' என்ற நூல் உள்ளிட்ட பல நூல்களும் இந்தப் பணியை