பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 - முற்டோக்கு இலக்கிய இயக்கங்கள் உரம்பெறச் செய்துள்ளன. மேலும் ஆர். கே. கண்ணன், எஸ். ஆர். கே ஆகியோரும் வேறு சிலரும் இந்தத் துறையில் குறிப்பிடத்தக்க பங்கினை ஆற்றியுள்ளனர். பாடல், கவிதை என்ற துறைகளை எடுத்துக் கொண் டால், மேடைகளில் பாடக் கூடிய இயக்கப் பாடல்களை இயற்றுவதில் ஜீவா வழிகாட்டியாக - விளங்கினார், அவருக்குப் பின் இத்தகைய பாடல்களைப் பலரும் ரசிக்கும் முறையில் நாமே இயற்றி, நூற்பதாம் ஆண்டுகளிலிருந்தே பாடி வந்தவர் கவிஞர் அமரர் வெ . நா. திருமூர்த்தியாவார். சொல்லப்போனால், கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணை சுந்தரத்துக்கே இவர்தான் முன்னோடியாக விளங்கினார் எனக் கூற வேண்டும். ஆனால் பட்டுக்கோட்டையார் சினிமா உலகில் பங்கேற்றுப் பணியாற்றியதன் பயனாக மிகவும் பிரபலமடைந்தார். அவரது நினைவு நாளை நாம் கொண்டாடி வருகிறோம். என்றாலும் திருமூர்த்தி பட்டுக்கோட்டையாருக்கு எந்தவிதத்திலும் சளைத்தவரல்ல. எனவே திருமூர்த்தியின் நினைவுநாளை நாம் கொண் டாடவும் அவரது பாடல்களைப் பிரபலப்படுத்தவும் வேண்டும். இவ்வாறு மேடைப்பாடல்களை இயற்றிப் பாடுவது, இசை நிகழ்ச்சிகள் நடத்துவது, கலை நிகழ்ச்சிகள் நடத்துவது ஆகியவற்றில் திருமூர்த்திக்குப் பின் குறிப் பிடத்தக்கவர்களாக விளங்கியவர்கள் எம். பி. சீனிவாசன்,

  • பாவலர் வரதராஜன், வில்லிசைக் கலைஞர்களாக விளங்கிய

சாத்தூர் பிச்சைக்குட்டி, சிவகிரி கார்க்கி ஆகியோராவர் . இவர்களை நாம் எந்த அளவுக்கு எந்தவிதத்தில் பயன் படுத்திக் கொண்டிருக்க வேண்டுமோ, அந்த விதத்தில் அந்த அளவில் பயன்படுத்திக் கொள்ளவில்லை . எம் . பி. சீனி வாசன் திரைப்படத்துறையில் சிறந்த இசையமைப்பாளராக விளங்கினாலும், அவரைக் கேரளம் பயன்படுத்திக் கொண்ட அளவுக்கு தமிழ்நாடு பயன்படுத்திக் கொள்ள வில்லை, அவரது இளைஞர் இசைக்குழு கோஷ்டிக்கான இசையில் ஒரு புதுமையைப் புரிந்ததாகும். பாவலர் வரதராஜன், போன்றவர்கள் விஷயத்தில் அவர்களது