பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்போக்கு இலக்கிய இயக்கங்கள் - 29 உணவw.-.-டாடாட கடமையடாயபட. கலைத் திறமையைப் பயன்படுத்திக் கொண்ட அளவுக்கு அவர்களுக்குப் பொருளாதார ரீதியிலும் வாழ்வதற்குத் தேவையான குறைந்த டச்ச உத்தரவாதங்களை அளிக்க, நாம் முயற்சி எடுத்துக்கொள்ளவில்லை. இதனால் இவர்களிற் பலரும். வெறும் கருவேப்பிலை போலவே பயன்படுத்தப் பட்டு விட்டார். நம்மைச் சார்ந்த நின்ற நாடகக் கலைஞர்கள் விஷயத்திலும் இதே நிலைமைதான் இருந்தது எனகலாம். ஏனெனில் தஞ்சை சிவராமன் நா.க மகன்தத்தைச் சேர்ந்த ராமலிங்கமும் அவரைச் சார்ந்த தோழர்களும் எத்தனை சிரமங்களை அனுபவித்தனர் என்பதை நானறி வேன். கவிதைத் துறையில் நமது கவிஞர்கள் எல்லோருமே பாரதியின் வழிவந்தவர்கள் தூம். பாரதிதாசனால் உருப் பெற்று, 1946 வரையில் திராவிட இயக்கம் தொடர்பைக் கொண்டிருந்து, பின்னர் நமது அணிக்கு வெந்து சேர்ந்த கவிஞர் தமிழ் ஒளி ஒரு குறிப்பிடத்தக்க கவிஞர்; சொல்லாட்சித் திறனும் கற்பனைத் திறனும் மிக்கவர்; நாடறிந்த கவிஞர்கள் பலரின் ஆகுதிக்குக் குறையாத தகுதி பெற்றவர். என்றாலும் ஏனோ நாம் அவரை நினைவிற் கொள்வதில்லை. பாரதி விழா, பட்டுக்கோட்டை விழா, பாரதிதாசன் விழா முதலியவற்றைக் கொண்டாடும் நாம் தமிழ் ஒளியையும் நினைவு கூர்ந்து அவரது பாடல்திறனை மக்களுக்கு எடுத்துக்காட்ட வேண்டியது அவசியம். நமது மூத்த கவிஞர்களில் கவிஞர் கே. சி. எஸ், அருணாசலம் நாற்பதாம் ஆண்டுகள் முதற்கொண்டே தமக்கே உரிய ஒரு தனிப்பாணியில் கவிதைகள் இயற்றி வந்தவராவார், கே - சி . எஸ் . பாடல்களைத் தவிர், பூர்வீகச் சொத்து' போன்ற சில நல்ல சிறுகதைகளையும் எழுதியவர். இவர் களது தலைமுறையைச் சேர்ந்த நானும் கவிதைத் துறையில் வெகுகாலமாக ஈடுபட்டு வந்திருக்கிறேன். குறிப்பாக, கவியரங்குகளில் நான் கலந்து கொண்டு அரங்கேற்றிய கவிதைகள் பலவும், தமிழ்க் கவிதை உலகில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தின என்று கூற முடியும். இவர்களைத் தவிர நமது