பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 ) முற்போக்கு இலக்கிய இயக்கங்கள் பிந்திய தலைமுறைச் சிறுகதை ஆசிரியர்களில் தனுஷ்கோடி ராமசாமி, களந்தை பீர் முகம்மது, பா, ஜெயப் பிரகாசம், மேலாண்மை பொன்னுச்சாமி, என், ஆர். தாசன், ஜெயந்தன், பிரபஞ்சன் முதலிய பலர் குறிப்பிடத்தக்கவர் களாக விளங்கியுள்ளனர், ஆராய்ச்சித் துறையில், குறிப்பாகப் பேராசிரியர் நா. வானமாமலை ' 'ஆராய்ச்சி'ப் பத்திரிகையையும், ஆராய்ச்சிக் குழுவையும் தோற்றுவித்த பின்னர், பண்டைக் கால, தற்கால இலக்கியங்கள் பற்றிப் பல குறிப்பிடத்தக்க கட்டுரைகளும், கால்களும் வெளிவந்துள்ளன. இவற்றில் நா . வா , தாமே எழுதிய 'தமிழில் வரலாறும் பண்பாடும்' முதலிய நூல்களைத்தவிர, கா , சுப்பிரமணியம் எழுதிய . “சங்க காலச் சமுதாயம்' நாவல்களைப் பற்றித் தோத்தாத்திரி

  • எழுதிய கட்டுரைகள் மற்றும் நூல்கள் ஆகியனவும்

குறிப்பிடத்தக்கவை. இவற்றின் மூலம் பல புதிய தெளிவு களும் உண்மைகளும் தெரிய வந்துள்ளன . 'ஆராய்ச்சியைப் பற்றிக் கூறும்போது, சிலப்பதிகாரத்தைப் பற்றி நான் எழுதியுள்ள 'இளங்கோவடிகள் யார்? என்ற நூலைப் பற்றிக் குறிப்பிடுவது வெறும் சுயவிளம்பரமாகாது என்றே நான் நம்புகிறேன். இதேபோல் விமர்சனத்துறையில் தி , க : சி. , தி . சு . நடராஜன் முதலியோர் அவ்வப்போது " குறிப்பிடத்தக்க பங்கினை ஆற்றி வந்துள்ளனர். இந்தத் துறையில் நாம் சாதித்த சாதனைகள், அதன் குறைநிறைகள், நமது பார்வையில் நிலவிய குறைபாடுகள், அதனால் ஏற்பட்ட தவறான கணிப்புகள் அல்லது மதிப்பீடுகள் ஆகியவற்றையும் நாம் ஆராய வேண்டும் , 1951 இல் எடுத்த கலை இலக்கியப் பெருமன்றத்தின் முடிவின்படி, நாட்டுப்புறக் கலைகள் விஷயத்தில் நா. வான மாமலை தொகுத்து வெளியிட்ட தமிழர் நாட்டுப் பாடல்கள், மற்றும் கதைப்பாடல்கள், இவை சம்பந்தமாக அவர் எழுதிய விமர்சனபூர்வமான ஆராய்ச்சிகள் முதலியவை குறிப்பிடத்தக்கவை . இதன் பயனாக, இன்று