பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 - முற்போக்கு இலக்கிய இயக்கங்கள் குறிப்பிட வேண்டும் . அறந்தை நாராயணன் எழுதிய 'மூர் மார்க்கெட்., 1 பிரபஞ்சன் எழுதிய 'முட்டை ' ஆகிய நாடகங்களும் குறிப்பிடத்தக்கவை. ஓவியத்துறையில் நமது சாதனைகள் மிகமிகக் குறைவு . இது சம்பந்தமாக என் நினைவுக்கு வருவது கடலூர் பாலன் நமது மாநாடுகளிலும், இளசை அருணா எட்டய புரம் பாரதி விழாவிலும் இடம்பெறச் செய்த ஒவியக் கண்காட்சிகள்தான். இந்தத் துறையில் நாம் இப்போதுதான் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளோம். இது சம்பந்தமாக அண்மையில் திருவண்ணாமலையில் நடந்த ஓவியப் பயிற்சி முகாம், இந்தத் துறையில் வருங்காலத்தில் நாம் நிச்சயமாகச் சில சாதனை களைப் புரிவோம் என்ற நம்பிக்கையை அளிக்கிறது. முடிவுரை நமது சாதனைகள் பற்றிய இந்தச் சுருக்கமான . பருந்துப் பார்வையோடு இந்த வழிகாட்டி. p.ரையின் இறுதிப் பகுதிக்கு வருகிறேன். முன்னர்க் கூறியபடி,, அறுபதாம் ஆண்டுகளுக்கு முந்திய காலம் வரையிலும், அல்லது ஐம்பதாம் ஆண்டுகளின் மத்தியக் காலம் வரை யிலும் நாம் கையாண்டு வந்த வறட்டுத்தனமான குறுகிய கண்ணோட்டமும் கருத்தோட்டமும் நமது வளர்ச்சிக்கு முட்டுக்கட்டைகளாகவே இருந்தன . சுருங்கக்கூறின், நாம் தான் விஞ்ஞானக் கண்ணோட்டம் கொண்டவர்கள், எனவே நாம்தான் விஞ்ஞானிகள், மற்றவர்கள் அஞ் ஞானிகள் என்பது போன்றதொரு மனப்பான்மையே அப்போது நம்மிடம் இருந்து வந்தது. இதிலிருந்து விடு பட்டு 1961இல் நாம் நடத்திய கலை இலக்கியப் பெரு மன்றத்தின் அமைப்புக் கூட்டமாகக் கோவையில் நடந்த பேரவைக் கூட்டத்தில்தான் தோழர் ஜீவா குறிப்பிட்டது போல், "மனிததத்துவப் பண்பை வளர்க்கும், போற்றும் ரீதியில் எவ்விதக் கலை வடிவங்கள், கலைப்படைப்புக்கள் .