பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்போக்கு இலக்கிய இயக்கங்கள் : "7 55. அமைந்தாலும் அவற்றை நாம் வரவேற்கிறோம்" என்றும் நாம் பிரகடனம் செய்தோம் . நான் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் "பேம்" பத்திரிகைக்கு அளித்த பேட்டியொன்றில், "எந்த ஓர் எழுத்தாளனுக்கும் ஒரு தத்துவ தரிசனம் இருக்கத்தான் வேண்டும்.... அதனைத் தேர்ந்து தெளிந்து உருவாக்கிக் கொள்வது அவனது பொறுப்பு . எந்தவொரு தத்துவமும் ஒரு வழிகாட்டிதான்; விலங்கல்ல . ஒரு தத் ஆலத்தின் மீது குருட்டுப் பக்தி கொண்டு, அதனை விலங்காகத் தரித்துக் கொண்டு, அதற்கு அடிமையாவதைப் போன்ற கொடுமை வேறு கிடையாது . அவ்வாறு அடிமைப்பட்டு விட்டால், பிறகு வாய்பாட்டுச் சூத்திரங்களை வைத்துக் கொண்டு, எதையும் அளந்து பார்த்து ஏமாறும் நிலைதான் ஏற்படும் . அப்போது அந்தத் தத்துவம் 12:டைப்பாளிக்குத் தேக்க நிலையைத்தான் உண்டாக்கும். மாறாக, அவன் அதைக் காலில் கட்டிய விலங்காக்கிக் கொள்ளாமல், கடலில் மிதக்கும் கட்டுமரமாக மாற்றிக் கொண்டு விட்டால், காற்றில் திசையறிந்து அதைச் செலுத்தவும் கற்றுக் கொண்டு விட்டால், பின்னர் அது அவனுக்குப் டேராக்கத்தை அளிக்கும். எந்தக் கடலிலும் அவனால் முன்னேறிச் செல்ல முடியும்" என்று கூறியிருந்தேன். இதையேதான் நான் இன்றும் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன் . எனவே சோஷலிச எதார்த்தவாதமே நயது கலை இலக்கியத்தின் இறுதியான குறிக்கோள் என்று நாம் கூறிக் கொண்டாலும், அதனை அர்த்தப்படுத்துவதில் ஏற்பட்ட வக்கிரமான போக்குகளையும் விகாரங்களையும் நன்றாக இனம் கண்டு, அதனை வெறும் வறட்டுச் சூத்திரமாக, வாய்பாடாகக் கொள்ளாமல், 'சோஷலிசம்' என்ற வார்த்தை இடம் பெற்றுவிட்டதால், கலை இலக்கியAANானது. அடி, முதல் முடி. வரையில் சோஷலிசக் கருத்தையே தன்னுள்; கருக் கொண்டிருக்க வேண்டும் என்று கருதிவிடாமல், அதன் பொருளை மேலும் அகலப்படுத்த வேண்டும், அதுவும்