பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 ) முற்போக்கு இலக்கிய இயக்கங்கள் காலதேசச் சூழ்நிலைகளுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப, அதனை நெளிவு சுழிவோடு பிரயோகிக்க வேண்டும் என்றே நான் கருதுகிறேன் , சொல்லப்போனால், முற்போக்கு இலக்கியம் என வரையறை செய்வதற்கே மனிதாபிமானம் அல்லது மனிதநேயம் தான் அதன் அடடிப்படையான அளவு கோலாக இருக்க வேண்டும் என்றும், மனிதகுலத்தக்கு நன்மை பயக்கும் ஆன்மீக மதிப்புக்களை, மானிட மதிப்புக் களைப் போற்றுபவை எல்லாமே முற்போக்கானவை என்றுமே நான் கருதுகிறேன். ஏனெனில் எந்தவோர் உண்மையான மனிதாபிமானியும் கம்யூனிச விரோதியாக இருக்க மாட்டார். இருக்க முடியாது என்பதே இதற்குக் காரணமாகும், 'ஆன்மீக மதிப்புக்கள்' என்று சொன்னவுடன் நம்மில் முகம் சுழிப்போர் சிலரும் உண்டு என்பதை நான் மறந்து விடவில்லை , 1951இல் நடந்த பேரவைக் கூட்டத்தில் ஜீவா ஆற்றிய உரையின்போது, "இன்றைய விஞ்ஞான அறிவோடும், நமது மக்கள் பௌதிக, ஆன்மீக வளர்ச்சித் துறைகளில் முன்னேற முயல்வதில் வெற்றி பெற உதவுவதே" நமது கடமையாகும் என்று குறிப்பிட்டார் . {த . க , இ - பெருமன்றக் கொள்கை - குறிக்கோள் பற்றிய விளக்கக் குறிப்பு. பக்கம் 17). இதனை 1968இல் நான் சமர்ப்பித்த அறிக்கையிலும் வலியுறுத்தியிருந்தேன் . இந்த இரு சம்பங் களிலும் 'ஆன்மீகம்' என்ற இந்தச் சொல்லை ஆட்சே பித்தவர்கள் நம்மிடையே இருக்கத்தான் செய்தனர். இதன் பின்னர் கலை இலக்கியப் பெருமன்றத்தின் புதிய கொள்கை அறிக்கைக்கு ஒரு நகலைத் தயாரித்து அனுப்பிய அதன் துணைத் தலைவர்களில் ஒருவரான திருச்சி தியாகராஜன் 'ஆன்மிகம்' என்று சொன்னாலே நாம் ஏதோ பண்டார சந்நிதிகளாக மாறி விடுவதுபோல் அஞ்சி, அந்தச் சொல் லையே நாம் கைவிட்டுவிடவேண்டும் என்று கூறியிருந்தார். ஆனால் 'ஆன்மிகம்' என்ற சொல்லை, நாம் மனிதா பிமானியாக இருந்து சொல்கிறோமே தவிர, மதாபிமானிகள் கொள்கிற அர்த்தபாவத்தில் சொல்லவில்லை . சொல்லப்