பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- - - முற்போக்கு இலக்கிய இயக்கங்கள் 87 போனால், மதாபிமானியான தாயுமானவரும் கூட "எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே" என்று பாடும்போது, அதில் அவரது மனிதாபிமானம்தானே பிரதிபலிக்கிறது அவர் மதாபிமானி என்பதால், அவரது மனிதாபிமானத்தை நாம் ஏன் சந்தேகிக்க வேண்டும்? 'ஆன்மிக மதிப்புக்கள் என்னும் போது நமது அர்த்தபாவத்தில் மனிதகுலம் வாழ்வதற்கு, ஒன்றுபட்டு வாழ்வதற்கு நித்தக் கவலைகள் நீங்கி, அதாவது தமது பெளதிகத் தேவைகளைப் பூர்த்தி செய்து மானிடம் பண்பாட்டை உயர்த்திக் கொள்வதற்கு உறுதுணையாக இருக்கும் பண்புகள் என்பதையே நாம் குறிப்பிடுகிறோம் ... இந்த மானிட மதிப்புக்களைப் போற்றுவதே மனிதாபிமான மாகும் . எனவே மனிதாபிமானம் என்பதை நாம் எவ்வாறு அர்த்தப்படுத்துகிறோம், அர்த்தப்படுத்த வேண்டும் என்பது முக்கியமானது . மனிதாபிமானம் என்பது மனிதப்பிறவி யின் மகத்துவத்தை, மனிதனின் பேராற்றலை உணர்வதும் ஒப்புக் கொள்வதுமாகும். அதே சமயம் மனிதனுக்கு இழைக்கப்படும் அநீதிகள், கொடுமைகள் ஆகியவற்றைக் கண்டு கழிவிரக்கம் கொள்வதோடு மட்டும் நின்று விடாமல், அவற்றைக் கண்டு கொதித்தெழுகின்ற தார்மிக ஆவேசமும் ஆகும். சொல்லப்போனால், "தாழ்த்தப்பட்ட மனிதனுக்குத் தாரக மந்திரத்தை உபயோகித்ததன் காரணமாக, நான் நரகத்தில் தள்ளப்படுவேன் என்றால் அந்த நரகவாசத்தையும் நான் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளத் தயார்", என்று கோயிலின் மீது ஏறி நின்று கூறிய ராமானுஜருக்கும். "மனிதனுக்குப் பணிபுரிவதற்காக நான் இங்கு பிறவி எடுக்க. வேண்டுமென்றால், அதற்காக நான் ஆயிரம் பிறவிகளையும் எடுக்கத் தயார்" என்று முழங்கிய விவேகானந்தருக்கும் இருந்த மனிதாபிமானம் அது, அதாவது மனிதாபிமானம் என்பது வெறும் மரக்கறிவாதமான ஜீவகாருண்யம் அல்ல.. மறியாடுகளாக மதிக்கப்பட்டு வரும் மக்களை மனிதர்களாக மதிப்பது. அவர்களும் எவ்வாறு மனிதர்களாக இருக்