பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 - முர்டோக்க இலக்கிய இயக்கங்கள் கிறார்கள் என்பதை உணர்ந்து அவர்கள் மீது அபி? £மஈனம் கொள்63: தா - அதுவே மனிதrvடமYணமாகும், அவர்கள் மீது கொள்வதும் பாசமும் நேசமுமே மனிதா பிமானமாகும். இங்கு இன்னொரு விஷயத்தையும் நான் குறிப்பிட விரும்புகிறேன். மனிதர்கள் பால், பிறக்கும் இந்த மனிதா பிமானம், மனிதநேயம் ஆகியவற்றின் விEMளவாய், மனித 22.ள்ளத்தில் _$1றக்கம் கருணை , தடை.4, கழிவிரக்கம், திருட்டு சிந்தனை, பரோபகாரம் ஆகியவற்றையெல்லாம் கூட, முதலாளித்துவச் சமுதாயம் போற்றிப் புகழும் மதிப்புக் ககாாகவே கருதத் தாண்டும் ஒரு போக்கும், சோஷலிச எதார்த்த வாதத்தை அர்த்தப்படுத்துவதில் புகுந்த வக்கிர மான பார்வையினாகப் ஆலதா க்கி நின்றதுண்டு. அன்ன சத்திரம் வைத்துப் பசிப்பிணியைப் (இ.A!சக்க முடியாதுதான், வறுமையை ஒழித்துவிட முடியாதுதான். அதனால் பசித்து வந்து 23கயேந்துபவனுக்கு ஒரு வேளை சோறு கொடுப்பது மானிட மதிப்பாக இல்லாது போய்விடுமா? தரும் செய்வதால் பிச்சைக்காரர்களே இல்லாமல் செய்துவிட முடியாதுதான். அதனால் பிச்சைக்காரனுக்குத் தருமம் செய்வதில் பயனில்லை என்று கருதுவதோ, தருமம் செய்வதே அதர்மம் என்று கருதுவதோ மனிதாபிமானமாகி விடுமா? அன்னதான வினியோகத்தையும் தரும் காரியங் களையும் தம்மைத் தருமப் பிரபுக்கள் என்று விளம்பரம் செய்துகொள்வதற்காகப் பயன்படுத்திக் கொள்ளும் வெசதிப்€டத்த 'வள்ளல் பிரபுக்களைப் பற்றி இங்குக் குறிப்பிடவில்லை. அவர்கள் ஒரு பக்கத்தில் தொழிலாளி யின் வயிற்றில் அடித்து விட்டு மறுபுறம் தானதருமம் செய்து தமது. சுரண்டலை மூடி மறைத்துத் தமக்கு விளம்பரம் தேடிக் கொள்கின்றனர். ஆனால் சாதாரண மனிதன் தனது சோதரனான இன்னொரு மனிதன்பால் காட்டும் கருணை, தயை, கழிவிரக்கம் ஆகியவையெல்லாம் முதலாளித்து மதிப்புக்கள் ஆகிவிடுமா என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.