பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்போக்கு இலக்கிய இயக்கங்கள் - 69 பக்கத் திருப்பவர் துன்பம் - தன்னைப் பார்க்கப் பொறாதவன் புண்ணிய மூர்த்தி: ஒக்கத் திருந்தி உலகோர் - நலம் உற்றிடும் வண்ணம் உழைப்பவன் யோசி என்றல்லவா நமது பாரதி பாடிச் சென்றிருக்கிறான் . . எனவே மனிதாபி:27sarம் என்பது ஒடுக்கப்பட்டவர் ககளையும் அடக்கப்பட்டவர்களையும் மனிதர்களாக மதித்து, அவர்கள்பால் அனுதாபம் கொண்டு அவர்கள்து துன்பத் தைத் தடக்கத் தான் ஒரு துரும்பையாவது எடுத்துப் போட வேண்டும் என்று கருதுவதும் மனிதாபிமானம்தான். என்றாலும் பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடர்களைக் கண்டு பரிதாபப்படுவதோடு மட்டும் நின்று விடாமல், அவர் களுக்குக் கைகொடுத்து அவர்களைக் கரையேற்றவும், அவர்களுக்கு விழி கொடுக்கவும் முனைகின்ற துடிப்பும் துணிவும் செயலாற்றலுமே சிறந்த மனிதாபிமானம் என்பது போர்க்குணம் மிக்க மனிதாபிமானமேயாகும். அது தீமை கண்ட இடத்தில் சீறும்; கொடுமை கண்ட இடத்தில் கொதித்தெழும்; அநீதியைக் கண்ட இடத்தில் அதனை அழித்தொழிக்கக் கை தூக்கும். அத்தகைய போர்க்குணம் மிக்க மனிதாபிமானமே நாம் பெரிதும் போற்றத்தக்க மனிதாபிமானமாகும். போர்க்குணம் மிக்க மனிதாபிமானம் என்று கூறும் போதே நாம் யார்மீது போர் தொடுக்கிறோம் , எதனை எதிர்த்துப் போர் தொடுக்கிறோம் என்பதிலும் தெளிவு இருக்க வேண்டும் . பால் கொடுக்கும் பசுவைத் தாயாக கோமாதாவாகக் - கருதிக் கும்பிட வேண்டும் என்று தருமம் வகுத்த பூமியில்தான், 'தன்னைக் கொல்லவரும் பசுவையும் கொல்லலாம் என்றும் தருடம் வகுக்கப்பட்டுள்ள து. "எவ் வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகுவதே அறம் என்று . உபதேசித்த வள்ளுவர்தான், "சொல்லப் பயன்படுவோர் சான்றோர்; கரும்பு போல் கொல்லப் பயன்படும் கீழ்"