பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்போக்கு இலக்கிய இயக்கங்கள் - 75 தமிழ்ப்பண்ணை , பாரதிப் பண்Sை ', போன்ற பிரசுர , அமைப்புகள் தோன்றின? , வை . கோவிந்தன், கதிரேசன் செட்டியார் எ '. கே . செட்டியார் போன்றோர் இம் முயற்சியில் தீவிரம் காட்டினர். டி. கே. சி, பி. ஸ்ரீ ; கவி மணி, நாமக்கல்லார், சுத்தானந்த - பாரதியார், பாரதி தாசன் போன்றோரின் நூல்கள் அதிகமாக வெளிவரத் ' தொடங்கின. கம்பரை ஒரு ஆழ்வாராகப் LAார்க்கும் பார்வை விட்டு, அவரை ஒரு கலைஞராகப் பார்க்கும் போக்கையும், கம்ப இராமாயணத்தை ஒரு பக்திக் காவியமாகப் பார்க்கும் போக்கை விடுத்து அதை ஒரு பேரிலக்கியமாகப் பார்க்கும் பார்வையையும், இவ்வமைப்புகள் பிரபலப்படுத்தின. வள்ளுவர். நெறியைத் தமிழ்ப் பண்பாட்டின் அடித்தளமாக ஆக்கத் திருவள்ளுவர் கழகங்கள் பிரச்சாரம் செய்தன. இலக்கியத்தைப் பதவுரை, பொழிப்புரை, அணி, அழகு பார்க்கும் பார்வையிலிருந்து உள்ளடக்கத்தில் கவனம் செலுத்த இம் மன்றங்கள் உதவின. தமிழ்த் தாத்தா உ. வே. சா. அவர்களின் பெரு முயற்சியால் முதன் முறையாகச் சங்க நூல்கள் மடங்கள், பெருநிலக்கிழார்கள், பெரும்பண்டிதர்கள் ஆகியோரின் வாசல்களைத் தாண்டி தமிழ் மக்களின் அனுபவத்துக்குக் கிடைத்தன. இந்த அளப்பரிய செல்வத்தைச் சுவைத்த தமிழ்ச் சமூகம், தன் பழங்காலத்தில் மிகுந்த பெருமிதம் கொண்டது. குறிப்பாகத் திராவிட இயக்கத்தின் இன வாதக் கண்ணோட்டம் சங்க நூல்களால் மிகவும் செழுமை யடைந்தது. திராவிட இயக்க அமைப்பானது அடிப்படையில் ஒரு சமூக அமைப்பு என்றாலும், அது பண்பாட்டுத் துறையில் மிகுந்த கவனம் செலுத்திற்று . திராவிட இனம், அல்லது தமிழ் இனம் என்ற அளவு கோல் அவர்களுடைய கலை இலக்கிய அளவு கோலாயிற்று. அந்த அளவுகோலை வைத்துக் கொண்டு அவர்கள் கம்ப ராமாயணத்தை ஆரியப்