பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதுபோக்கு இலக்கிய இயக்கங்கள் (1) 77 வ. . ரா. கணிசமான பங்காற்றினார் . திரு . வி . க , வும் இப்போக்கைப் பேணி வளர்க்கத் தொடங்கினார் . கலை இலக்கியத்தில் மனித நேயத்தைத் தேடும் முயற்சிகளுக்கு மணிமேகலை மன்றங்கள், வள்ளலார் மன்றங்கள், போன்ற மன்தங்கள் பங்களிப்புச் செய்தன. டி. கே. சி. யின் ரசனை அணுகு முறை, "சீனிவாச ராகவனின் ரசனையும் மேற்கத்தி யப் போக்கும் கலந்த அணுகுமுறை ச. கணேசனின் கம்பன் கழகச் செயல்பாடுகள், இவையெல்லாம் தமிழகத்தில் , ஆரோக்கியமான ஒரு கலை இலக்கிய அமைப்பு தோன்று வதற்கு உரிய சூழ்நிலையைத் தோற்றுவித்தன. அகில இந்திய அளவில் விடுதலைப் போராட்ட வேகமும், சோவியத் யூனியனின் தாக்கமும், பாஸிச ஆபத் திலிருந்து மனித குலத்தைக் காக்கும் வேகமும், அகில இந்திய அளவில் 36-ல் இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உருவாகக் காரணமாயிருந்தன, அதைத் தொடர்ந்து சுதந்திர இந்தியாவில் 'இப்டா' உருவாயிற்று . தமிழகத்தில் 1984ல் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கிளை நாரணை ஆரைக் கண்ணன் தலைமையில் உருவாயிற்று . மாநாடுகள், நடத்து தல், எழுத்தாளர்களைப் பாராட்டுதல், எழுத்தாளர் நலன் களைப் பேணுதல் என்ற வகையிலேயே அதன் செயல்பாடு இருந்தது. ஒரு இயக்கமாக அது செயல்படவில்லை . கிட்டத்தட்ட அதே காலத்தில் தோன்றிய தமிழ் எழுத்தாளர் சங்கமும் இதே மாதிரிதான் செயல்பட்டது. அதற்குப் பல மாவட்டங்களில் கிளைகள் இருந்தன என்பது ஒரு " 11:12 வேறு கலையில் அ சி . போன் என்ற அவர், நெல்லையில் அண்ணாச்சி சண்முகம் பிள்ளை, . நா . வா., ரகுநாதன், தி . க. சி , போன்றோர் இந்தக் காலத் தில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்ற அமைப்பை நிறுவி நடத்தினர். அதுவும் தொடர்ந்து இயங்கவில்லை . 50-களின் தொடக்கத்தில் சென்னையில் மீண்டும் ஒரு தமிழ் எழுத்தாளர் சங்கம் கல்கி தலைமையில் தொடங்கப் பட்டது. ஆனால் அதுவும் இயக்கமாக உருப்பெறவில்லை.