பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 - முற்போக்கு இலக்கிய இயக்கங்கள் இக்கால கட்டம் தமிழ் இசைத்துறையிலும் வளர்ச்சியை ஏற்படுத்திற்று . சமூகத்தின் மீது சினிமாவின் தாக்கம் அதிகம் படத்தொடங்கியிருந்தது : தியாகராஜ பாகவதர், சின்னப்ப பாகவதர், பாவனாசம் சிவன், என் : எஸ். கே., போன்ற கலைஞர்கள் தொ¢டகட்டிப் பறந்தனர். இவர்களுடைய பேச்சாலும் பாட்டாலும் தமிழ் உரை நடையும் இசையும் மாற்றம் அடைந்தனர். சங்கீதக் கச்சேரி யில் தமிழ் இசைப் பாடல்கள் கேட்கத் தொடங்கின . தமிழ் மக்களின் இந்த இசை ஆர்வத்தை ஒரு இயக்கமாக வளர்த்த பெருமை முத்னதய்யா செட்டியாரையும், அவருடைய தமிழ் இசை மன்றத்தையும் சாரும். 40-களின் பிற்பகுதியிலும் $13-களின் முற்பகுதியிலும் நிலப் பிரபுத்துவ ஆதிக்கங்களை உடைப்பதில் கம்யூனிஸ்டு இயக்கம் அளப்பரிய தியாகங்களைச் செய்தது . தேசத்தின் மிகச் சிறந்த புதல்வர்கள் துப்பாக்கிச் சூட்டிலும், தூக்குக் கயிற்றிலும் சாகடிக்கப்பட்டனர். கம்யூனிஸ்டுகள் மீது உழைக்கும் மக்களுக்கு மரியாதையும், செல்வாக்கும் அதி கரித்தன . தமிழகத் தியாகிகளின் நினைவாக உழைக்கும் மக்கள் பகுதிகளில் தியாகி பாலுமன்றம், தியாகி சிவராமன் மன்றம், களப்பால் குப்பு மன்றம், தியாகி பொன்னு மன்றம், தியாகி வேலாயுதம் மன்றம், தியாகி மாரி மணவாளன் மன்றம் போன்ற பல மன்றங்கள் தோன்றின. இவ்வமைப்பு கள் ஓரளவுக்கு முற்போக்குக் கல:ல. இலக்கிய அமைப்பு களின் பணியையும் செய்தன. தமிழகக் கலை, இலக்கியத் துறை, அல்லது பண் பாட்டுத் துறையின் நிகரற்ற 20-ம் நூற்றாண்டு வழி காட்டியான பாரதியை அணுகும் பல்வேறு போக்குகள் தோன்றின . பாரதி அரசியலையும் சமூக மாற்றத்தையும் 'பாடியதால் அவன் அமர கவியல்ல என்றார் கல்கி , தற் காலத் தமிழ் இலக்கியத்தின் பல்வேறு போக்குகளுக்கு வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்த 'மணிக் கொடி'யில் கூட அடிப்படை போக்குடையவர்கள் இருந்தார்