பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்போக்கு இலக்கிய இயக்கங்கள் - 31 இசை, பயணக் குறிப்புகள், ஆராய்ச்சி நூல்கள், தொழில் நுணுக்க இயல், விஞ்ஞானம், பொது அறிவுத்துறைகள், காவற்றிலும் நாங்கள் படைக்கப்பட்டு வருகின்றன. மொழி பெயர்ப்பு, அகராதி, ஆராய்ச்சிக் கலைக் களஞ்சியம், 4ல், (டிடங்கள், தமிழ் வளர்ச்சிக்கழகம், தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மன்றம், நுண்கலைகள், இன்கண்கள், இகைய வேறு இவை குறித்து எமது பல்கலைக் கழகங்களில் மட்டுமின்றி, வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களிலும் ஆராய்ச்சியும், திறனாய்வும் பெருகியபொ றுள்ளான். இந்த முழு வடிவ முன்னேற்றத்தால் மக்களுடைய கலாச்சார வாழ்வில் பெரும் எதிரொலிகள் கேட்கின் றன . இந்த முன்னேற்றத்தில் தெளி வும் உண்டு , குழப்பமும் உண்டு, முற்போக்கும் உண்டு, பின்னடைவும் உண்டு, நன்மைகளும் இரண்டு, தீமைகளும் உண்டு. ஆனால் ஒன்று - இந்த மாபெரும் பின்னணியில் தான் - இந்த கலாச்சாரப் பொது எழுச்சியின் ஒரு பகுதி யாகத்தான் நமது மாநாடு அமைகிறது என்பதை யாரும் ஒப்புக்கொள்வார்கள்." பெரு மன்றத்தின் கொள்கை குறிக்கோள் பற்றிய விளக்கக் குறிப்பின் மகள் வரையில் அதன் முதல் பொதுச் செயலாளர் தா . பாண்டியன் இவ்வாறு சொல்லுகிறார், "தமிழகத்தின் பல பகுதிகளில் இயங்கி வரும் மன்றங்களை, ஒன்றாக ஒரு தலைமையின் கீழ், இணைத்து, ஒரே நோக்குடனும், போக்குடனும் கலை இலக்கியப் பணி புரிய வேண்டும் எனும் நன் நோக்குடன் தோற்றுவிக்கப்பட்டது தான் . தமிழ்நாடு கலை இலக்கியப் பெரு மன்றம் ." இவ் வாறு, தமிழகத்தில் ஏற்பட்டுக் கொண்டிருந்த பண்பாட்டு மறுமலர்ச்சியின் மலராக தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தை ஜீவாவும் அவருடைய தோழர்களும் மிகப்பரந்த அடித்தளமிட்டு உருவாக்கினார்கள் . த. க. இ. பெ. 1951 - மே 28, 29, 30 மூன்று நாட்கள்.. கோவையில் நடந்த மாநாட்டில் அமைக்கப் பட்டது. இந்த மாநாடு தமிழ்ப் பண்பாட்டு வரலாற்றில் மிக முக்கியமான ஒரு சம்பவம். அன்றைய கல்வி அமைச்சர்