பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிகாட்டி உரை

தொ. மு. சி. ரகுநாதன் கருத்தரங்கத் தலைப்பின் கருப்பொருளும் அதன் வீச்சும் மிகவும் ஆழமும் அகலமும் கொண்டவை . நான் வழங்கவிருக்கும் இந்த வழிகாட்டும் உரையில் இந்த அரை நூற்றாண்டுக்கால் வரலாற்றை விவரமாக விளக்கிக் கூறுவதையோ, இந்த அரை நூற்றாண்டுக் காலத்தில் நமது சாதனைகள் என்னென்ன எனப்பட்டியல் போட்டுக் கூறுவதையோ நான் நோக்கமாகக் கொள்ளவில்லை , அதனால், பல எழுத்தாளர்களின் பெயர்கள், அவர்கள் எழுதிய நூல்கள், அவற்றின் குறைநிறைகள் பற்றிய கருத்துகள் இந்த உரையில் இடம்பெறாமல் போகலாம். இந்த வழிகாட்டி 2.ரையின் நோக்கம் இதுதான் : தமிழ்நாட்டு முற்போக்கு இலக்கிய முன்னோடிகளில் ஒருவன் எனக் கருதப்படுபவன் என்ற முறையிலும், முற்போக்கு இலக்கிய இயக்கத்தில் ஆரம்ப காலம் முதல் இன்றுவரை தொடர்ந்து இருந்து வருபவன் என்ற முறை யிலும், இந்த ஐம்பதாண்டுக் காலத்தைப் பின்னோக்கிப் பார்த்துச் சில உரத்த சிந்தனைகளையும், விமர்சனமாகவும் சுய விமரிசனமாகவும் அமைந்த சில கருத்துகளையும், உங்கள் முன் மனம் திறந்து பேசி, உங்கள் மத்தியில் ஆரோக்கியமான ஒரு விவாதத்தைத் தூண்ட வேண்டும் என்பதேயாகும். மேலும், இந்தக் கருத்தரங்கில் பங்கெடுப். பவர்கள் பலரிலும் வயதால் மூத்தவன், சென்ற தலை முறையைச் சேர்ந்தவன் என்ற முறையிலும், இப்போது இளந்தலைமுறையினர் பலர் கடந்த கால் நூற்றாண்டுக் காலத்தில் முற்போக்குக் கலை இலக்கியத் துறையிலும் இயக்கத்திலும் பங்கேற்றுள்ளனர் என்ற காரணத்தாலும்,