பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்போக்கு இலக்கிய இயக்கங்கள் | 83 -- -- --- நரக வாசத்தையும் நான் மகிழ்ச்சியோடு ஏற்கத் தயார் என்று சொன்ன இராமானுஜம் மனிதனுக்குப் பணிபுரிவதற்காக நான் இங்கு பிறவி எடுக்க வேண்டும் என்றால், அதற்காக நான் ஆயிரம் பிறவிகளையும் எடுக்கத் தயார் என்று முழங்கிய - விவேகானந்தனும் கைக்கொண்ட மனிதா பிமானமாக அது இருத்தல் வேண்டும்..... உண்மையான மனிதாபிமானம் என்பது போர்க்குணம் மிக்கதாகும். அது தீமை கண்ட இடத்தில் சீறும், கொடுமை கண்ட இடத்தில் கொதித்துக் குமுறும். அநியாயத்தைக் கண்ட இடத்தில் அதனை அழித்து ஒழிக்கக் கொடி தாக்கும் . அத்தகைய போர்க்குணம் மிக்க மனிதாபிமானத்தையே நாம் மனிதாபிமானமாக மதிப்பிடுகிறோம்." கோவை மாநாட்டில் பெருமன்றத்தின் கொள்கை உருவாக்கப்பட்டதோடு, அக் கொள்கையைச் செயல்படுத்த ஒரு மத்தியக் குழுவும், பல்வேறு துணைக்குழுக்களும் அமைக்கட்பட்டன. தலைவர் ஜீவா, துணைத்தலைவர் ரகுநாதன், பொதுச் செயலாளர் தா. பாண்டியன், இவர்கள் போக, ஆர். கே . கண்ணன், முகவை இராஜமாணிக்கம், எம். பி. சீனிவாசன், டாக்டர் எஸ். கிருஷ்ணமூர்த்தி, கவி . வே. நாரா, எஸ். காமராஜ், 'என் . கிருஷ்ணசாமி, கே. பி. எஸ். கோன், கு. சின்னப்ப பாரதி, மு. பழனியப்பன், தா. வே. சிராச்சாமி, - பேராசிரியர் நா : வானமாமலை, ஜெயகாந்தன், தஞ்சை ராமமூர்த்தி, கடலூர் பாலன், டி . கே . பாலச்சந்திரன் ஆகியோரைக் கொண்ட மத்தியக் குழு அமைக்கப்பட்டது . இதுபோக இலக்கியத்துக்கும், நாட்டார் இலக்கியத்துக்கும், நாடகத் துக்கும், இசைக்கும் இலக்கிய மன்றத்துக்கும், ஓவியத் துக்கும் துணைக்குழுக்கள் அமைக்கப்பட்டன , த . க . இ . பெ : தொடங்கும் முன்னமேயே அகில இந்திய அளவில் - முற்போக்கு எழுத்தாளர் தேசிய சம்மேளனம் அமைக்கப்பட்டு, அது தமிழ் நாட்டிலும் கிளைவிட்டிருந்தது என்பது ஜீவாவும் அவர் தோழர்களும் அறியாததல்ல. இருந்தாலும் ஜீவா. கலை இலக்கியம்