பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 ) முற்போக்கு இலக்கிய இயக்கங்கள் பெருமன்றம் என்ற (டெயரையே இந்த அமைப்புக்குச் சூட்டினார். இந்தியாவில் வேறெங்கும் கேட்டிராத இந்தப் பெயரை அவரும் தோழர்களும் சூட்டக் காரணம் என்ன? பிரதானமாக ஜீவா விரும்பியது புதிய ஜனநாயகத்துக்குத் தேவையான சோசலிச சமூகத்தை உருவாக்கும் வலிமை உள்ள புதிய மனிதவைப் பண்பாட்டு ரீதியாக வளர்த் (தெடுப்பதே . கோவை மாநாட்டின் தொடக்க உரையில் அவரே சொல்லுகிரார். "...... இந்த மாபெரும் பின்னணியிலேதான், இந்தக் கலாச்சாரப் பொது எழுச்சியின் ஒரு பகுதியாகத்தான் நமது மாநாடு அமைகிறது. " கலைஞர்கள், இலக்கியவாதிகள், தத்துவ அறிஞர்கள், விமர்சகர்கள், இவர்களை அனுபவிக்கிற மக்கள் : இவர் களின் கூட்டமைப்பாகத்தான் ஜீவா இந்தப் பேரமைப்பைக் கண்டார். குறைந்தபட்சம் மனித நேயத்தை ஏற்றுக் கொள்ளுகின்ற யாரும் இதில் உறுப்பினராகலாம் என்ற வரையறை இதனால்தான் வைக்கப்பட்டது , த . க . இ. பெ யின் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளுகின்ற எந்தக் கலை இலக்கிய அமைப்பும் அப்படியே தி. க. இ. டெ. யுடன் இணைந்து கொள்ளலாம் என்ற விதிமுறை இதனால்தான் உருவாக்கப்பட்டது, 'ஜீவாவின் நோக்கம் மிகவும் விசாலமானது, ஒரு மக்கள் பண்பாட்டுப் பல்கலைக்கழகம் அமைக்கும் இழை கொண்டது, தமிழக மக்களின் பண்பாட்டு வாழ்வைப் புரட்சிகரமாக மாற்றியமைக்கும் பெருநோக்கம் கொண் டது , பண்பாட்டுத்தளத்தின் சகல துறைகளிலும் ஞானம் பெற்று முன்னோடிகள், இவர்களிடம் சயிற்சி பெறும் இளைஞர்கள், தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்படும் சிளைகள், அவற்றின் வழியே எங்கெங்கும் பூத்துக் குலுங்கும் மவிதேகக் கலை இலக்கியம் மலர்கள், இவற்றில் தோய்ந்து, வலிமையும், விசாலமும், மென்மையும், ஒருசேரப் பெறும்