பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்போக்கு இலக்கிய இயக்கங்கள் ! தமிழினம் - இதுவே அவர் கனவு. ஆனால் கனவுகள் லேசில் பலித்துவிடுமா? நாலிலே ஒன்றிரண்டு பலித்தாலும் பலிக்கும் என்கிறான் பாரதி. கோவை மாநாட்டைத் தொடர்ந்து சிறிதுகாலமே ஜீவாவால் ஓடியாடி வேலை செய்ய முடிந்தது. 52-ல் சோசலிச உலகத்தில் கீறல் விழுகிறது. எல்லைப் பிரச்சினை யால் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் மோதல் ஏற்படுகிறது . இந்தியாவிலும் வலிமைமிக்க கம்யூனிஸ்ட் இயக்கத்தில் விரிசல் ஏற்படுகிறது. ஏற்கெனவே பாதிப்புக்குள்ளாகி யிருந்த ஜீவாவின் உடல் நலம் சீன ஆக்கிரமிப்புக்கு எதிராகத் தமிழகத்தைத் தட்டி எழுப்பும் முயற்சியில் மேலும் பாதிப்படைகிறது . 1963-ஜனவரி 10-ல் அந்த மாபெரும் மனிதநேய இதயம் துடிப்பதை நிறுத்திற்று. என்றாலும் கலை இலக்கியப் பெருமன்றம் தொடர்ந்து வளர்ந்தது'. பெரு நகரங்களில் மட்டுமல்ல, சிற்றூர்களிலும் கூடக் கலை இலக்கியப் பெருமன்றக் கிளைகள் தோன்றின. கவியரங்கங்கள் பட்டிமன்றங்கள், கருத்தரங்குகள், விழாக்கள் போன்றவை மூலம் மனித நேய இலக் சியத்தின் சாரங்கள் மக்களுக்கு இளட்டப்பட்டன. பொரிய. சிறிய நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன. 1963-ல் மதுரை யில் முதல் மாநில மாநாடு சிறப்பாக நடந்தேறியது . தொ. மு . சி . ரகுநாதன் அடைப்பின் தலைமைப் பொறுப்பேற்றார் , பொதுச் செயலாளர் தா. பாண்டியன், கலை இலக்கியப் பெருமன்றக் கூட்டங்களுக்குப் பத்தாயிரக்கணக்கில் ரேட் வசூல் ஆகும் அளவுக்கு அமைப்பின் செல்வாக்கு மக்களிடையே பரவிற்று. மதுரை மாநாட்டுக்குப் பின்னர் பெருமன்றம் இலக்கியத் துறையில் பெரும் சாதனைகள் புரிந்திருக் கிறது. பேராசிரியர் நா. வா., ரகுநாதன், ஜெயகாந்தன்,