பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 - முற்போக்கு இலக்கிய இயக்கங்கள் செயபால் வேறு, வயிற்றின் செயல் வேறு, சிறு நீரகத்தின் செயல் வே R, சில வேளைகளில், சில உறுப்புகள் பழுதுபட்டால், இன்னொரு உறுப்பு உதவி செய்யும் . ஆனால் அந்தந்தக் கட..டைமயை அந்தந்த உறுப்புகள் செய்வதே இயல்பானது, முழுமையானது , ஆனால் வருத்தலுக்குரிய செய்தி என் கனவென்றால் மனிதப் பொது லட்சியத்தை அடையும் வழி முறையில் அரசியல் வழிமுறையே ஆக முக்கியமானது என்று கருதும் போக்கு மேலோங்கி இருக்கிறது . நிலப் பிரபுத்துவ, முதலாளித்துவ வாழ்க்கை முறையின் விளை பொருளfrன. இந்தப் போக்கு, இன்றைய ஜனநாய்கயுகத்திலும் அப்படியே தூக்கிப் பிடிக்கப்படுகிறது. அரசியல் மாற்றம் வந்தால் போதும், எல்லா மாற்றங்களும் கொண்டு வந்துவிடலாம். . என்ற குருட்டு நம்பிக்கைப் போக்கு இது. மாற்றங்களை ஏற்றுக்கொள்ளவும், சீரணித்துக் கொள்ளவும் தகுதியும் வலிமையும், விசாலமும், உள்ள மனித இதயங்களை மனித ஆன்மாக்களை உபண்பாட்டுத் துறையால்தான் உருவாக்க முடியும் என்ற கருத்தை இப்போக்கு நிராகரிக்கிறது. இதனால் உடனடி அரசியல் நோக்கங்கள் பண்பாட்டுத் துறையின் மீது திணிக்கப்படுகின்றன . உடனடிய அரசியல் தேவைகள் பண்பாட்டுத்துறைக்கு அன்னியமானவையோ, வேண்டாதவையோ அல்ல. மனித நேயத்தை அடிப் படையாகக் கொண்ட முற்போக்கு கலை இலக்கியங்கள். சமூகத்தின் உடனடித் தேவைகளைக் கலைப் படைப்புக்கு உள்ளடக்கமாக எடுத்துக் கொள்ளாவிட்டால் அவை மாண்டு மடிந்து போவது திண்ணம். ஜீவா என்ன சொல்லுகிறார்? "நாளை விரிசோதி: என மேதினியை மேவத்தகு ஆற்றலைப் படைத்த இன்றைய உண்மைத் துணுக்குகளை, அனுபவக் கூறுகளை, உணர்ச்சித்துளிகளை, ஆதர்சக் கதிர்களை, கலை இலக்கியத் துறையிலே ஆட்சி கொண்டு, வாழ்வின் மீட்சியிலே மக்கள் வெற்றி பெறப் பணிபுரியுங்கள்" என்று அறை கூவல் விடுக்கிறார்! முற் போக்குக் கலை இலக்கியத் துறையினருக்கு இதை விடச் சிறந்த ஒரு வழிகாட்டுதலை வேறு. எங்கும், எவரும்,