பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்போக்கு இலக்கிய இயக்கங்கள் 89 எப்போதும் கொடுத்ததாக நான் இதுவரை அறியவில்லை, இதுதானே கலை இலக்கியப் பெருமன்றத்தின் ஆதார வெளிச்சம். இந்த வெளிச்சம் - பிற்காலத்தில், தெரிந்தோ தெரியாமலோ. அரசியல் வெளிச்சத்துக்கு உட்படுத்தப் பட்டது , பண்பாட்டுத் தளத்தின் சுதந்திரத்தை - அதன் தனித் தன்மையை அரசியல் தளத்துக்குச் சமமான அதன் முக்கியத்துவத்தை இடைக்காலத் தலைவர்கள் அவ்வள வாகப் போற்றவும் இல்லை . பொருட்படுத்தவுமில்லை என்றே தோன்றுகிறது. இதன் விளைவாக, சிறந்த மனித நேயக். கலை இலக்கியவாதிகள் பெருமன்றத்தை விட்டு விலகினர். கலைக் குழுக்கள் நாடகக் குழுக்கள் உருவாக்கம் தடைபட்டது. நிறுவனத்தின் மீது மட்டுமல்ல, அதன் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் ஆகியோரின் படைப்பு களிலும் இந்தப் போக்கின் நிழல் படிந்தது. இதை விட விசித்திரம் என்னவென்றால் பிற மேடைகளில் சோசலிச லட்சியத்துக்கு விரோதமாகப் பேசுபவர்கள் கூடக் கலை இலக்கியப் பெருமன்ற மேடையில் ஏறியதும் கம்யூனிஸ்டுக் கட்சியின் அரசியல் புகழ்பாடுவோர்களாக நிறம் மாறி விடுகின்றனர், இந்த வீழ்ச்சியிலிருந்து தன்னை மீட்டுக் கொள்ளக் கலை இலக்கியப் பெருமன்றம் இக்காலத்தில் நிறுவனரீதியாக எதுவும் செய்யவில்லை . 70-களின் தொடக்கத்தில் கலை இலக்கியப் பெரு 'மன்றத்தைப் புனரமைக்க வேண்டும் என்ற ஆசை . தமிழகத்தில் பலருக்கும் பரவலாக ஏற்பட்டது. தோழர் பாலதண்டாயுதம் வடக்கிலிருந்து சில முயற்சிகளைத் தொடங்கினார். அவைகளும் முழுமை அடையவில்லை . தெற்கே பேராசிரியர் நா. வா . இளைஞர்களைத் திரட்டி, கலை, இலக்கியப் பெருமன்றச் செயல்பாடுகளை ஊக்கப் படுத்தினார். அவருடைய ஆராய்ச்சிக் குழுக் கூட்டங்கள் பண்பாட்டு ரீதியாக இளைஞர்களைக்கூட்டி பயிற்சி அளித்து, வளர்க்கும் பாசறை ஆயிற்று . பேராசிரியரின்