பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S் -- முற்போக்கு இலக்கியம் இயக்கங்கள் டொனால் வீக்க: தென்:Brai:ட்டங்களில் கலை இலக்கியப் பெருமன்றம் வேர்பிடித்து வளர உ.தலில , என்றாலும் மத்திய அமைப்பு சோர்ந்து முடங்கிக் கிடந்ததால் இந்தச் செயல்பாடுகள் வடக்கு மாவட்டங்களில் வீச்சு ஏற்படுத்தவில்லை. இக்கால கட்டத்தில் கோவை வானம்பாட்டக் குழு புதுக்கவிதைக்குப் புதிய உள்ளடக்கத்தைக் கொடுத்து, தமிழகம் முழுவதும் பிரட3லப்படுத்தியது - தி. க. சி, தாமரை யின் மூலம் ஆற்றல் உள்ள பல இளைஞர்களை இலக்கிய உலகுக்கு அறிமுகப்டுத்தினார் , இவர்கள் பலர் நெல்லை ஆய்வுக் குழுக் கூட்டங்களில் தொடர்ந்து கலந்து கொண்டனர். கலை இலக்கியப் பெருமன்றம் செயல்பட வில்லையே என்ற ஏக்கம் இவர்களைக் கோபப்படுத்திற்று. இவர்களின் முயற்சி மதுரையில் அப்போது துடிப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த நவபாரதி, பொன்மணி, பரிணாமன், சந்திரபோஸ் போன்ற - தோழர்களின் ஒத்துழைப்பு, சிற்பி, மற்றும் கோவை வானம்பாடிக் குழுவின் ஆதரவு, இவையெல்லாம் சேர்ந்து 1971-ல் தென் தமிழக {{மற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்ற அமைப்பாக உருப்பெற்றது , இதன் முதல் மாநாடு மதுரையில் 2-நாள் வெகு சிறப்பாக நடந்தது . ஆனாலும் கவிதை என்று சொல்லுவதற்குரிய , பிரதான பொருள் எது? உருவமா, 4,ள்ளடக்கமா என்ற பிரச்சனையில் தோழர்களிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு அந்த அமைப்பும் குறைப் பிரசவமாக மரணமடைந்தது : 73ல். பாலன் மறைவு அவருடைய முயற்சிகளுக்கும். முற்றுப்புள்ளி வைத்தது. சென்னையில் டி , எஸ் , ரவீந்திரதாஸ் தொடர்ச்சி யாகச் சில நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருந்தார். புதுக்கோட்டை, தஞ்சை, மதுரை, ராஜபாளையம், சிவகங்கை, நெல்லை , குமரி, தருமபுரி, கோவை <ாவட்டங்களில் சில கிளைகள் தங்களுக்குத் தோன்றிய வாறு செயல்பட்டுக் கொண்டிருந்தன,