பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்போக்கு இலக்கிய இயக்கங்கள் | குமரிக்கிளை 1964-லிலேயே தோற்றுவிக்கப்பட்டு விட்டது . ஆயினும் 72 வரை ஆண்டுக்கு ஒரு முறை பாரதி விழாவும், கவிமணி விழாவும் நடத்துவதே அவர்களின் . செயல் திட்டம். ஆராய்ச்சிக் குழுவின் தாக்கத்தால், குமரியில், பண்பாட்டுப் பிரச்சனைகளை விஞ்ஞான சித்தாந்த அடிப்படையிலே தெரிந்து கொள்ளும் ஆர்வ முள்ள ஓர் இளைஞர் படை ஆரோக்கியமாக உருவா யிற்று , கவிதை, சிறுகதை, சிறு நாடகங்கள், வில்லுப் பாட்டுக்கள், கனியான் கூத்துகள், விமர்சனம், தத்துவம் இவற்றில் ஆர்வமுள்ள இளைஞர்கள் வாரந்தோ ஐம் கலை இலக்கியப் பெருமன்றக் கூட்டங்களைத் தொடர்ந்து நடத்தினர். இக் கூட்டங்களின் பெரும் பேச்சாளர்களின் சிறப்புரைகள் தவிர்க்கப்பட்டன. பேராசிரியர்கள் வானமாமலை, சிவகப்பிரமணிய சன் டி. எஸ், நடராஜன் பொன்னீலன் போன்றோர் இளைஞர்களின் படைப்புகளை ஆக்கபூர்வமாக விமர்சித்து, ஆலோசனை கூறி அவர்களைச் செழுமைப்படுத்தி வளர்க்கப் பெரிதும் உதவினர். இந்த வளர்ச்சியால் இரண்டு விளைவுகள் ஏற்பட்டன , ஒன்று 1975-இல் "புதிய வானம்' என்ற கலை இலக்கியமாத இதழ் தோன்றியது , பேராசிரியர் நா , வா . வழிகாட்டுதலில் "குமரி கலை இலக்கிய முகாம்' என்னும் ஆரோக்கியமான செயல்பாடு தோன்றியது . ஆயினும் இவற்றின் வீச்சுக்கள் தென் மாவட்ட எல்லைகளைத் தாண்ட வெகுகாலம் பிடித்தது. 1971 முதல் 1977 அரையில் உள்ள காலம் சுதந்திர இந்திய அரசியலில் மிகவும் கொந்தளிப்பான. காலம். இந்திரா காந்தியும் கம்யூனிஸ்ட் கட்சியும் இதர சில சக்திகளும் இணைந்து தேசிய ஜனநாயகப் புரட்சியை முழுமைப்படுத்தி சோசலிசத்துக்குச் செல்லும் பாதையில் முனைந்தன . ஜெ . பி. தலைமையில் இதர கட்சிகள் அணி அமைத்து முழுப்புரட்சிக்கான போராட்டத்தைத் தீவிரப் படுத்தின. இக்காலத்தில் மக்கள் ஜனநாயகப் புரட்சியை