பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ix "அப்போ, சங்க நூலில் ஒன்று....... திருமுருகாற்றுப்படை பக்திநூல்தானே படிக்கத் தொடங்குவோமா? சிறிது நேரச் சிந்தனை; பின் "சரி பார்க்கலாம்” என்கிறார் ஐயா. 'அண்ணாநகர் எங்கள் வீட்டில் இதனைச் சொல்லவேண்டும் கேட்கச் சிலர் விரும்புகிறார். வண்டி அனுப்புகிறேன் என்றபடி டாக்டர். "என்ன யாழ்ப்பாணம் வசதி எப்படி?” என்பக்கம் கொக்கியை ஜயா கொழுவ, 'எனக்கும் சம்மதம் என்பதைத் தெரிவிக்கிறேன். பிற்பகல் வேளையொன்றில் திருமுருகாற்றுப்படை அறிமுகம் தொடங்கியாச்சு. "அடியாரை முருகனிடம் ஆற்றுப்படுத்தலென்றால் 'அடியார் ஆற்றுப்படை' என்றல்லோ இருக்கவேண்டும். முருகாற்றுப்படையென்பதால் முருகனையா வேறுஇடம் ஆற்றுப்படுத்துகிறார்?" ஐயாவின் சிந்தனைகள் சால்பிரித்து உழுகிறது. மறுநாள், ஆற்றுப்படையின் முதலாறு அடிகளையும் வாசிக்கச் சொல்லிச் சிந்தனையைத் தொடருகிறார். புழக்கத்தில் அருகிய பழைய தமிழ்ச் சொற்கள் விளக்கம் தரமறுக்க எங்கள் குறுக்கீடும் அதிகமாய்த் தடுக்கிறது.