பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 ஆ அ.ச. ஞானசம்பந்தன் இவற்றையல்லாமல் பிற்பட்டுத் தோன்றிய கிறித்துவம், இஸ்லாம் என்ற இரண்டும் இறைவனை ஆண்பாற் பெயர் கொண்டே விளிக்கின்றன. என்றாலும் அந்தப் பொருளுக்கு ஒரு திருவடியைக் கற்பித்து அதனைப் பற்றிப் பேசும் பழக்கமில்லை. இயேசுவிற்கும் முற் பட்ட யூதர்கள் போற்றி வணங்கும் தெய்வங்களுக்கும் திருவடிப் பெருமை பேசும் பழக்கமில்லை. அப்படி யானால் இந்தியாவில் மட்டும் தோன்றி வளர்ந்த சைவம்,வைணவம், ஜைனம், பெளத்தம் ஆகிய நான்கு சமயங்களும் திருவடிக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தது ஏன் என்பதுபற்றித் தனியான ஆராய்ச்சி நடைபெறுதல் நலம். 'மனக்கவலை மாற்றல் அரிது’ எனவரும் தொடர் சிந்தனைக்குரியது. கவலை என்பது மனத்தில் தோன்றும் உணர்ச்சியின் ஒரு பிரதிபலிப்பாகும். கவலைப்படாத மானிட உயிரே இல்லை என்று கூறிவிடலாம். அறிவு மூளையின்பாற்பட்டது என்று முன்னரே குறிப்பிட்டோம். இந்த அறிவு கல்வி அறிவு, பட்டறிவு என இருவகைப்படும். இந்த இரண்டு அறிவுகளும் எவ்வளவு வளர்ச்சியடைந்து மனத்திடைத் தோன்றும் கவலைகளை ஆராய்ந்து இக்கவலைகள் தோன்றக் காரணமேயில்லை என்று முடிவு செய்தாலும் கவலை ஒரு சிறிதும் குறைவதில்லை. கல்வி அறிவு, பட்டறிவு என்ற இரண்டினாலும் கவலையைப் போக்க முடியா தென்றால் வேறு என்னதான் வழி? கையில் ஆறாவது விரலொன்று இருக்குமேயானால் ஒரு சில காலம் கவலைப்பட்டு, பின்னர் அதனை ஏற்றுக் கொண்டு இருந்துவிடுகிறோம்.