பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்றுறாச் சிந்தனைகள் இ 75 கவலை இத்தகையதன்று. அது மனத்திடைத் தோன்றுமேயானால் நாளொரு மேனியும் பொழு தொரு வண்ணமுமாக வளர்ந்து இறுதியில், தான் குடி புகுந்தமனத்தையும், அதனை உடையவனையும் வெட்டிச் சாய்த்து விடுகிறது. ஒருவனுடைய வாழ் வையே பலி கொள்ளும் இந்த மனக்கவலை போக்கப் பட அல்லது மாற்றப்பட வேண்டுமேயானால் அதற்கு ஒரேயொரு வழிதான் உண்டு. அதனையே இக்குறள் பேசுகிறது. ‘தாள் சேர்ந்தார்க்கு என்பதற்குத் திருவடிகளே அடைக்கலம் என்று நினைத்து அந்த நினைவிலேயே வாழ்பவர்களுக்கு என்று பொருள் கொள்ள வேண்டும். இந்த நுணுக்கத்தை அறியாதார் மருந்து மாத்திரைகளாலும் வேறு வழிகளாலும் இந்தக் கவலையை போக்க முயல்கின்றனர். கள், குடியில் தொடங்கிப் போதை மருத்துவரை கையாள்பவர் களைக் கேட்டால் ஒரே பதில்தான் கிடைக்கும். "ஆயிரக் கணக்கான கவலைகளால் சூழப்பட்ட நான் அதிலிருந்து விடுபட ஒரே வழி இந்தப்போதை மருந்து தான்” என்று விடையிறுப்பதைக் காணலாம். ஆனால் கவலையை வென்றுவிட்டதாக அல்லது மறந்துவிட்ட தாக வெளிப்படும் இந்தக் கும்மாளம் இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்குத்தான். மறுபடி கவலைகள் இரட்டை வேகத்துடன் மனத்திடைப் புகுந்துவிடுகின்றன. மறுபடி குடி, மருந்து, மாத்திரை தான். ஒரு தீய வளையமாகச் சுற்றிவரும் இம்மனநிலை கவலையை மாற்ற எவ்வித வழியையும் காணவில்லை.