பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 奪 அ.ச. ஞானசம்பந்தன் அனுபவ ஞானியாக விளங்கும் தெய்வப்புலவர் உறுதியாகவும் தெளிவாகவும் விளக்கமாகவும் ஒரு வழியைக் கூறத் தொடங்குகிறார். அதுதான் திருவடியை அடைக்கலமாக அடைந்தவர்களை அல்லாமல் வேறு எவ்வழியிற் செல்பவர்களும் மனக் கவலையைப் போக்கவே முடியாது என்பதாகும். கப்பலின் பாய்மரத்தின் மேல் ஏறி அமர்ந் திருக்கும் பறவை, கடலில் வெகுதுரம் சென்ற பிறகு, அமைதியை இழந்து தத்தளிக்கிறது. மறுபடியும் தான் வாழ்ந்த பூமிக்கு மீண்டு விட வேண்டும் என்று நினைக் கிறது. பாய்மரதை விட்டு வெகுதூரம் பறந்து சென்றும் கரை எங்கும் காணப்படாமையால் மறுபடியும் கப்பலின் பாய்மரத்திற்கே சென்று விடுகிறது. அது போலத் திருவடியிலிருந்து புறப்பட்ட ஆன்மா இந்த மானிட உடம்பெடுத்தவுடன் எல்லையற்ற இன்ப துன்பகளில் ஈடுபடுகிறது. பின்னர் இன்ப துன்பங் களால் ஏற்படும் மனக்கவலையைப் போக்க வேண்டும் என்று நினைக்கிறது. எப்படிப் போக்க வேண்டும் என்ற கவலை மிகமிக, பல்வேறு முயற்சி களையும் மேற்கொண்டு பயன் ஏற்படாமல் போகவே இறுதியாகத் திருவடிகளையே தஞ்சமென்று அடை அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் பிறவாழி நீந்தல் அரிது (8) அறம் என்பது பருப்பொருள் அன்று. பருப் பொருளாக இருக்கின்ற ஒன்றைக் கண் முதலிய பொறி களின் மூலம் அளக்க முடியும். கண்கள் இரண்டுதான். அவை வடிவாலும் அளவாலும் மிகச் சிறியவை.