பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்றுறாச் சிந்தனைகள் இ 77 என்றாலும் என்ன? மிகப் பெரிய உலகத்தின் பெரும் பகுதியை இந்தக் கண்கள் காணும் அளவிற்கு ஆற்றல் உடையவை. ஆகாயமும் விண்மீன்களும் கோள்களும் மதி ஆகிய பொருள்களும் மிக மிகப் பெரியவை என்பதை நாம் அறிவோம். என்றாலும் இரண்டு சிறிய கண்கள், மேல் கூறியவற்றைத் தனித் தனியாகவும் ஒருங்கிணைத்தும் காணக்கூடிய ஆற்றலுடையவை. காட்சியளவில் இந்தக் கண்கள் செய்யும் காரியத்தைச் சொல்லின் மூலமாக வடிக்க முனைந்தனர் நம் முன்னோர். அளக்கலாகாப் பரிமாணமுடைய இந்த ஸ்துரலப் பிரபஞ்சம் கண்ணுக்குள் சிக்கிக் கொள் வதைப் போல், நேர்மை, பரிவு, அன்பு, அருள் ஆகிய பண்புகள் அனைத்தும் அறம் என்ற மூன்றெழுத்துச் சொல்லினுள் அகப்பட்டுக் கொள்கின்றன. கண்ணைத் திறந்தவுடன் பிரபஞ்சம் வெளிப்பட்டு நிற்பதுபோல் அறம் என்ற சொல் காதில் விழுந்த வுடன், அறம் என்ற சொல்லினுள் அடங்கியிருக்கும் மேலே கூறிய பண்புகள் மனத்திடை வெளிப்பட்டுத் தோன்றுகின்றன. - - மனிதனுக்குள்ள இந்த ஆற்றலின் சிறப்பை அறிந்துகொண்ட ஒவியர்கள், சிறந்த ஒவியத்தின் மூலமும், கவிஞர்கள் சிறந்த சொற்களைச் சிறந்த முறையில் அடுக்குவதன் மூலமும், மனிதமனத்தின் கற்பனைக்கு விருந்து வைக்கின்றனர். - மிகப்பெரிய அளவில் பரந்தும் விரிந்தும் ஆழ்ந்தும் இருக்கின்ற கடல் தொன்றுதொட்டே மனிதனின் ஆர்வத்தையும் வியப்பையும் தூண்டி விடும் ஒரு பொருளாக அமைந்து விட்டது. அறவடி