பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 ஆ அ.ச. ஞானசம்பந்தன் வாக இருக்கும் இறைவன் பொறி புலன்களுக்கு அகப் படாதவன். அறமும் அப்படித்தான். இவை இரண் டையும் அவரவர் வளர்ச்சிக்கேற்பக் கருத்தளவில் விரித்துக் காணலாமே தவிர இரண்டும் எல்லை இல்லாதவை. இவற்றிற்கு எல்லை வகுத்துப் பொறி புலன்களுக்கு அகப்படும் முறையில் வடிவு கொடுத்தல் இயலாது. ஆதலின், உவமை உருவகம் என்பவற்றைக் கையாள்கிறான் கவிஞன். நம்முடைய பொறி புலன்களில் அகப்படும் பொருள்களில் அன்றைய நிலையில் அளக்கலாகாப் பரிமாணமுடை யது கடல். எனவே பொறி புலன்களுக்கு அப்பாற் பட்ட அறத்தைப் பொறிபுலன்களுக்குட்பட்ட ஆழி யாக உருவகம் செய்கிறான் கவிஞன். உவமை உருவகம் இரண்டிலும் ஒருபுடை ஒத்திருத்தல் தேவையே தவிர முழுதும் ஒத்திருக்க வேண்டும் என்று நினைப்பது தவறு. ஆழி என்று கூறிய வுடன் அது உப்புத் தன்மையுடையது என்று நினைந்து ஆழி என்ற சொல்லுக்குப் பெருவெள்ளம் என்று பொருள் சொல்லத் தேவையில்லை. அறம், கருத்தில் மட்டும் (conceptual) நிலைபெறும் பொருளாய் இருத் தலின் எல்லோரும் அதனைப் புரிந்துகொள்ள இயலாது என்று அறிந்துகொண்ட கவிஞன் கட்பொறி அளவைக்குட்பட்ட (visual) கடலை உவமையாக்கு கிறான். எனவே, அற ஆழி என்பது கடல் போன்று பரந்தும், விரிந்தும், ஆழ்ந்தும் உள்ள அற வடிவின னாகிய ஒருவனைக் குறிக்கின்றது. இப்பொழுதும் இதில் ஒரு குறை இருக்கின்றது. அறவடிவினன் என்று கூறியதால் அந்தப் பொருளின் தன்மையை ஒரளவு கூறினாரே தவிர அத்தன்மைகளுள் மிக இன்றியமை