பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்றுறாச் சிந்தனைகள் இ 79 யாத ஒன்றை இந்த உருவகம் குறிப்பிடவில்லை. அனைத்தையும் படைத்து, காத்து, அழிக்கின்ற அப்பொருளின் ஐந்தொழில்கள் பற்றிக் கூறவந்த இலக்கணம், அவற்றுள் மற்றொரு முக்கிய செயலாகிய அளித்தல் (அருளல்) என்பதையும் குறிப்பிடுகின்றது. அளித்தல் என்றால் கருணையோடு இரங்கி அருளுதல் என்ற பொருளைத் தரும். அப்பொருள் அளித்தல் என்ற செயலைச் செய்யாவிட்டால் உயிர்கள் நொந்து போகும். அது நேராமல் இருக்கவே அளித்தல் என்ற செயலையும் செய்யும். எனவே, ஐந்தொழில்களில் தலையாய இடம் பெறுவது அளித்தலே ஆகும். அறவடிவினனாகிய ஒருவன் படைக்கலாம்; காக்கலாம்; மறைக்கலாம்; அழிக் கலாம். இதைவிட முக்கியமாக அருள் செய்ய வேண்டும். அதனைக் குறிப்பிடவந்த ஆசிரியர் "அந்தணன்” என்ற சொல்லால் குறிப்பிடுகின்றார். அந்தணன் என்ற சொல்லிலுள்ள தண் என்பது குளிர்ச்சி என்ற பொருளைத் தரும். நொந்து வாழும் உயிருக்கு இப்பொழுது அறக்கடவுளின் குளிர்ந்த அருள் தேவை. அறவடிவினன் ஏனைய நான்கு தொழில்களிலும் அளித்தலை மிகுதியாகப் பெற்றுள் ளான் என்பதைக் குறிக்கவந்த ஆசிரியர், அந்தணன் என்ற சொல்லால் அதனை எடுத்துக் கூறினார். ஆழி போன்ற அறவடிவினனும் தண்மைபூண்ட அந்தண னும் ஆகிய இறைவன் என்று பொருள் கூறுவதே சிறப் புடையது என்று தோன்றுகிறது. அடுத்துள்ள பிற ஆழி என்பதற்குப் பிறவிக் கடல் என்றும் பிறதுன்பக் கடல்களென்றும் இருவேறு வகையாகப் பொருள் கூறியுள்ளனர். பிறவிக் கடல்