பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 இ. அ.ச. ஞானசம்பந்தன் என்று பொருள் கொண்டாலும் பிற கடல்கள் என்று பொருள் கொண்டாலும் பிழை ஒன்றும் இல்லை. அடுத்துவரும் சொற்கள் நீந்தல் அரிது’ என்பதாகும், கடலை நீந்திக் கடத்தல் யாருக்கும் இயல்பது ஒன்றன்று. அப்படியானால் அதனை நீந்திக் கடக்க ஒரு புணையோ தெப்பமோ தேவை. புணையென்பது நீரில் மிதக்கும் ஒரு கட்டையாகும. இதன் துணையை நம்பி நீந்துபவர்கள் தங்கள் முழு முயற்சியையும் உழைப்பையும் பயன்படுத்தினாலொழிய அப்புணை கரை சேர்க்காது. எனவே அப்புணை ஒரளவு உதவுமே தவிர முழு உதவியையும் செய்யாது. இதன் எதிராக, தெப்பத்தில் ஏறி அமர்ந்து விட்டால் நம்முடைய முயற்சி ஏதும் இல்லாமல் கடலைக் கடந்துவிடலாம். தெப்பத்தையும் ஒருவர் உந்திச் செலுத்த வேண்டுமே என்ற வினாத் தேவையில்லை. காரணம் தெப்பத்தைச் செலுத்துவதற்கென்றே ஒருவர் இருக்கின்றார். இதனை மனத்துட்கொண்டு பார்த்தால், தாள் சேர்ந்தார்க்கு' என்ற தொடருக்குத் திருவடியாகிய தெப்பத்தில் அமர்ந்தவர்கட்கு என்று பொருள் கொள்வது நேரிதாகும். - இந்நாட்டில் தோன்றிய நான்கு சமயத்தாருக்கும் மூலமந்திரம் என்று ஒன்று உண்டு. அதனையே பற்றி, விடாது போற்றுவார் பிறவிக் கடலை நீந்துவர் என்று இச் சமயங்களும் பேசும். இதிலுள்ள இடர்ப்பாடு என்னவென்றால் அந்த மந்திரங்களை நம் மனத்துள் செலுத்தி அவற்றை விடாது பற்றிக்கொண்டு நிற்கும் கடப்பாடு நம்முடையதாகிவிடுகிறது. இதனையே மாணிக்கவாசகர், - -