பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்றுறாச் சிந்தனைகள் & 81 弹植致é李காமவான் சுறவின் வாய்ப்பட்டு இனி என்னே உய்யுமாறு என்றென் றெண்ணி ஐந்தெழுத்தின் புணைபிடித்துக் கிடக்கின்றேனை. திருவாக 31) என்று பாடுகிறார். புணை என்றாலே அதற்கென்று ஒரு தனித்துவம் இல்லை. அதனைப் பற்றி நிற்கின்றவன் உயிர் பிழைக்க வேண்டுமானால் அதனை விடாது பற்றி நிற்க வேண்டிய கடப்பாடு அவனுடையதாகிவிடுகின்றது. தாள் சேர்ந்தார்க்கு என்ற தொடருக்குத் தாளாகிய தெப்பத்தைச் சேர்ந்த வர்க்கு என்று பொருள் கூறினோம். . தாள் என்பதற்குத் தெப்பம் அல்லது புனை என்று கூறும் பொருளை உரையாசிரியர்கள் சிலர் இலக்கண வழி நின்று மறுத்துள்ளனர். அறக் கடல் என்று இறைவனை உருவகித்து விட்டால் அந்த இறை வடிவத்தின் ஒரு பகுதியாகிய திருவடியைத் தெப்பம் அல்லது புணை என்று உருவகித்தல் பொருந்தாது என்பர். சற்றுச் சிந்தித்தால் கடலுக்கென்று தனி வடிவம் இல்லை; கடலில் இருக்கும் நீருக்கும் தனி வடிவம் இல்லை. அமைந்திருக்கும் இடம் அல்லது பாத்திரம் என்பவற்றிற்கு ஏற்பவே கடலும் நீரும் வடிவு பெறுகின்றன. வடிவு கடந்த பொருளாகிய ஒருவனை அறவடிவினன் என்று கூறும்போது மனத்திடைத் தோன்றும் சிக்கலுக்குக் காரணம், வடிவினன் என்ற சொல்லே ஆகும். வடிவு என்று சொல்லியவுடன் பருப்பொருள்தான் நினைவுக்கு வருகிறது. இறைவன். வடிவில்லாதவன்; அறம் வடிவில்லாதது என்றாலும் வடிவில்லாத அறத்திற்கு ஒரு வடிவைக் கற்பித்தால்