பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 இ. அ.ச. ஞானசம்பந்தன் அது இறை வடிவாகவே இருக்கும். இறைவடிவு என்று கூறியவுடன் நம்மையும் அறியாமல் கால் கை என்று உறுப்புக்களை அவ்வடிவிற்கு ஏற்றி விடுகிறோம். இதனால் நேரும் சிக்கல்தான் அறவடிவினன் என்று கூறி விட்டு அந்த வடிவின் கால்களைத் தனியே பிரித்துத் தெப்பமாக உருவகம் செய்வது தவறு என்ற முடிவிற்கு அழைத்துச் செல்கிறது. அறக்கடலின் உருவமே அவ்வடிவம் என்று கூறிவிட்ட பிறகு திருவடி என்ற ஒன்றைக் கற்பித்து அது தெப்பம் போல் உள்ளது அல்லது புணை போன்று உள்ளது என்று கூறுவதில் ஒரு தவறும் இல்லை. தாள் என்று கூறியவுடன் அது முதற்பொருளுக்குரிய சினை அல்லது உறுப்பு என்று இடர்ப்படத் தேவையில்லை. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணவே, 'திருவடி என்பது திருவருள்' என்பதன் பரியாயச் சொல்லெனக் கூறிச் சென்றனர் சான்றோர். கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை. (9) ஒரு சில சொற்கள் தவிர இக்குறளில் வரும் ஏனைய சொற்களுக்குப் பொருள் கூறுவதில் உரை யாசிரியர்களிடையே அதிகப் பிரச்சினை தோன்ற வில்லை. - இயற்கையின் படைப்புக்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் குறிப்பிட்ட பணியைக் குறிப்பிட்ட முறையில் செய்வதற்கேற்றபடி அமைந் துள்ளன. நீருள் வாழும் மீன் பிராணவாயுவை உட் கொள்ளாமல் வாழமுடியாது. காற்றை உள்ளிழுத்து