பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்றுறாச் சிந்தனைகள் இ 83 வெளிவிடும் நிலை பெரும்பாலான உயிர்களுக்கும் வாழ்வதற்குரிய அடித்தளமாகிறது. தண்ணிரை விட்டு வெளியே வந்தால் உயிரை இழந்துவிடும் மீன்கள் என்ன செய்யமுடியும்? உயிர் வாழ வேண்டுமானால் பிராணவாயு தேவை. எனவே இயற்கை, நீர்வாழும் உயிர்களுக்காக ஒரு வழியை அமைத்துள்ளது. நீரில் கலந்திருக்கின்ற பிராணவாயுவைப் பிரித்தெடுக்கும் ஒர் உறுப்பை மீன்களுக்கு அமைத்துள்ளது அது. இதிலிருந்து ஒன்றைத் தெரிந்து கொள்ளலாம். எந்த உயிரும் உடம்புடன் வாழும்போது உடம்பி லுள்ள பல உறுப்புக்களும் குறிப்பிட்ட பணியை நிறைவேற்ற அந்த உடம்பினுள் அமைக்கப் பெற்றுள்ளன. ஐயறிவு விலங்குகள்வரை இந்த உறுப்பு கள் தத்தம் பணியைச் செவ்வனே செய்கின்றன. பிறப்புச்சங்கிலித் தொடரில் உயர்ந்து நிற்கும் மனிதப் பிறவியை எடுக்கும்பொழுது பிரச்சினை ஆரம்ப மாகிறது. ஐம்பொறிகள் என்று சொல்லப்படும் மெய், வாய், கண், மூக்கு, செவி என்பவை உயர்மட்ட விலங்குகட்கும் மனிதனுக்கும் பொதுவானவைதான். ஆனால் மனிதனைப் பொறுத்தவரை இப்பொறிகளும் அவற்றின் பற்றுக்கோடாகவுள்ள சுவை, ஒளி, ஊறு, ஒசை, நாற்றம் என்ற புலன்களும் சிக்கல் தரத் தொடங்கிவிடுகின்றன. ஒளி என்ற புலன் கண்ணாகிய பொறியின் பற்றுக் கோடாகும். ஒளிமிக்க மின்னலையோ, சூரியனையோ நேரே பார்த்தால் கட்பொறி கெட்டுவிடும். எத்தகைய ஒளியைப் பார்க் கலாம், எத்தகைய ஒளியைப் பார்க்கக் கூடாது என்ற