பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 * அ.ச. ஞானசம்பந்தன் பிரச்சினை விலங்குகளிடைத் தோன்றுவதில்லை. அவ் விலங்குகளுக்கு இப்பொறிகளைப் படைக்கும் போதே இயற்கை, இயல்புணர்ச்சி (instinct) என்ற ஒன்றையும் கூடவே படைத்து விடுகிறது. ஆகவே கண்ணாகிய பொறி, மின்னலையும் சூரியனையும் நேரே பார்க்கக் கூடாது என்பதை விலங்குகள் தம் இயல்புணர்ச்சியால் அறிந்து, அதன்வழி நடக்கின்றன. மனிதன் என்று வரும்பொழுது பகுத்தறிவு என்ற ஒன்றைப் பெற்றுவிட்ட காரணத்தால், இந்த இயல் புணர்ச்சியை அப்பகுத்தறிவு மீதுார்ந்து விடுகிறது. கண் என்ற பொறியை எடுத்துக் கொண்டால் ஒளி என்ற பற்றுக்கோடு (புலனுணர்வு) அக்கட்பொறிக்கு உரிய தாகவுள்ளது. மின்மினிப் பூச்சி, மெழுகுவர்த்தி, மின்சார விளக்கு, சூரியன் ஆகிய அனைத்தும் ஒளியை வெளிவிடுகின்றன. எந்த ஒளியை நேரிடை யாகப் பார்க்கலாம் எதைப் பார்க்கக் கூடாது என்ற இயல்புணர்வு மனிதனிடம் இருந்தாலும் பார்த்தால் என்ன அல்லது வேறு எதன் துணைகொண்டு அவ்வொளியை நேரிடையாகப் பார்க்கலாம் என்று பகுத்தறிவு ஆராயத் தொடங்குகிறது. ஓரளவிற்கு இதில் வெற்றி கிட்டுகிறது என்பதில் ஐயமில்லை. ஆனால் இந்த அறிவாராய்ச்சி, எந்த அளவில் நிறுத்திக் கொள்ளப்பட வேண்டும் என்ற அளவுதான் மனிதனுக்குப் பிடிபடவில்லை. மனிதனின் இந்த நுண்ணறிவு நுனிக்கொம்பர் ஏறி அதைக் கடந்து செல்ல முயல்கிறது. இம்மாதிரி நேரங்களில் இம் முயற்சி மனிதனை வீழ்ச்சியடையச் செய்கிறது. கட்பொறியைப்போல ஏனைய நான்கு பொறிகளுக்கும் சுவை, ஊறு, ஓசை, நாற்றம் என்ற